15 Purushottama Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ பஞ்சத₃ஶோ(அ)த்₄யாய: . புருஷோத்தமயோக₃:
பாகம் 15 –பேராண்மை நெறி
ஊர்த்₄வமூலமத₄:ஶாக₂மஶ்வத்த₂ம் ப்ராஹுரவ்யயம் .
ச₂ந்தா₃ம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத₃ ஸ வேத₃வித் (15-1)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
1 (1) (உவமானம் சொல்வதென்றால்) சம்சாரம் என்பது வேர் மேலேயும் கீழேயுமான பெரிய மரம். அதன் இலைகளே வேதங்கள்.
கீழிருந் துயரப் படரும் கிளையாய்ச் சிறக்கும் வேதம
சூலிருந் துதிரும் மலரும் சுகந்தமே பலன்கள் கனிகள
போலிருந் தடையும் பயனும் போகமும் அடையும் பிறவி
கு₃ணப்ரவ்ருத்₃தா₄ விஷயப்ரவாலா: .
அத₄ஶ்ச மூலான்யனுஸந்ததானி
கர்மானுப₃ந்தீ₄னி மனுஷ்யலோகே (15-2)
2 (2) மரமாய்ப் படர்ந்த பிரகிருதியே உலகில் பல்பொருளாய் எல்லாத் தோற்றங்களும் தருவது. அது குணங்களால் வளர்க்கப் பட்டது.
கிடந்தது ஈரே ழுலகக் கிளைகளும் ஆகும் பழகப்
படர்வது பாசத் துணர்வும் பற்றிடும் மூன்றரு குணமும்
தொடர்வது மாயா ஜாலத் தோற்றமே ஆகக் காண்க
நாந்தோ ந சாதி₃ர்ன ச ஸம்ப்ரதிஷ்டா₂ .
அஶ்வத்த₂மேனம் ஸுவிரூட₄மூலம்
அஸங்க₃ஶஸ்த்ரேண த்₃ருடே₄ன சி₂த்த்வா (15-3)
யஸ்மின்க₃தா ந நிவர்தந்தி பூ₄ய: .
தமேவ சாத்₃யம் புருஷம் ப்ரபத்₃யே .
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ (15-4)
3 (3-4) விடுதலை வேண்டுமென்றால், சம்சார மரத்தை வெட்டுவது ஒன்றே விவேகம். அப்படிச் செய்வது ஒன்றே நிர்மலமான விடுதலையை அளிக்கும்.
கட்டுக கிளைகள் கனியின் காமத்தை அயரச் செய்க
ஒட்டுத லொழிய ஆசை ஓய்ச்சலும் அடங்கச் செய்க
கிட்டுக பிரம்மா நந்தக் ர்த்தியை அடைந்து உய்க
4 (3-4) சம்சார மரத்தை அப்படி வெட்டத்துணை வருவது விவேகம் ஆகிய வாள் ஒன்றே. அதனை உபயோகிக்க, உறுதி, ஆசை இல்லாமை ஆகிய துாய வலிவு தேவை.
அருளிய மெஞ்ஞா னத்தால் ஆசைகள் இல்லா ததனால்
பரவிய சம்சா ரத்தைப் பாவித்த அச்வ மரத்தை
உருவிய வாளால் வெட்ட உயற்செயற் துறவு வேண்டும்
அத்₄யாத்மனித்யா வினிவ்ருத்தகாமா: .
த்₃வந்த்₃வைர்விமுக்தா: ஸுக₂து₃:க₂ஸஞ்ஜ்ஞைர்-
க₃ச்ச₂ந்த்யமூடா₄: பத₃மவ்யயம் தத் (15-5)
5 (4-5) மரத்தை வெட்டிச் சாய்ப்பதை விட, மரத்தின் வித்தான ஆசையை ஒழிப்பது மிகவும் பாதுகாப்பானது. அதுவே நிரந்தர உறுதியைத் தருவது.
பாசமே பட்டும் திக்கு பாவித்து அழிக்கும் இலைகள்
பூசையே களைகள் நீக்கிப் பூவினை அருளும் சத்து
ஆசையே மரத்தின் வித்து ஆதலால் அதனைக் கொத்து
யத்₃க₃த்வா ந நிவர்தந்தே தத்₃தா₄ம பரமம் மம (15-6)
6 (6) அத்தகைய ஞானத்தைத் தரும் ஆன்மா, எல்லாவற்றுக்கும் ஆதாரமானது, எளிதில் அறியப்படாதது. அதனால் அங்கே சூரிய சந்திரர்கள் இல்லை. ( அதாவது புறப்பார்வை இல்லை.)
வார்க்கின்ற பொன்னும் தீயின் வடிவத்தை மாற்றுவ தில்லை
மேற்கண்ட மதியோ கதிரோ மெய்ப்பொருள்சாற்றுவ தில்லை
சேர்க்கின்ற கதியைக் கூறச் செகத்திலோ ஏதும் இல்லை
மன:ஷஷ்டா₂னீந்த்₃ரியாணி ப்ரக்ருதிஸ்தா₂னி கர்ஷதி (15-7)
7 (7) பரமாத்மா பிரகிருதியால் விளைத்த பிரதிபிம்பமே சீவாத்மா. உடலில் உயிராய்க் குடியிருக்கும் சீவனும், உலகெலாம் பரந்து உருவகிக்கும் பரமனும் ஒன்றே. (ஸாங்கியரின் பிரம்ம, பிரகிருதி மாறுபாடுகள் இங்கே கூறப்பட்டது.)
ஆவன் அவனே அணுவாய் அண்டம் அசலம் கடலாய்
மேவும் பொருளாய் உடலில் மெலியும் பிரகிருதி யாலே
தாவும் உயிராய்த் தகையும் தன்மை அறிந்து கொள்க
8 (இது பானையுள் அடைந்த வெளியும், பறத்தில் பரந்த வெளியும் எவ்வாறு ஒன்றானதோ அதைப் போன்றது. நன்கு ஆராய விளங்கும் அத்வைத சத்தியம் இதுவே.)
தடத்தை அழித்த போதில் தழுவும் ஒன்றை ஒன்று
புடத்தைப் போலே மேனி போகிடச் சீவன் பிரம்மன்
இடத்தைச் சேர்வ தாகும் இயற்கை வைத்த சாரம்
க்₃ருஹீத்வைதானி ஸம்யாதி வாயுர்க₃ந்தா₄னிவாஶயாத் (15-8)
9 (8) உடலை விட்டுப் போகும் போது நினைவாகிய சூட்சும உடலை ஆன்மா எடுத்துச் செல்கிறது. பிறகு, நினைவில் உறுதியாக வைத்திருந்த ஆசைக்கேற்ற வகையிலும், தனது பழைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பொருத்தமான மற்றொரு பூத உடலை அடைகிறது.
மென்னுடல் எடுத்துச் செல்லும் மேலுடல் விட்டுத் தள்ளும்
முன்னுதல் வினையும் நினைவும் முயற்சியில் அடையாப் பலனும்
உண்ணுதல் பெறவே தக்க உடலினை அடையக் கூடும்
10 (இதனையே உபாதி, வாசனை என்றெல்லாம் கூறுவார்கள். இவ்வாறு பிறவிகள் தோறும் வரும் பயனும், கேடும், மென்னுடலில் தேக்கி வைத்த நினைவுப் பிரதியினாலே வருவன என்பதை உணர்க.)
வாடவே வைக்கும் பூர்வ வாசனை கருமம் என்றும்
சூடுவர் அறிவோர் சீவன் சூடிய உபாதையி னாலே
தேடவே பிறவிக் கடலில் தெரித்தநீர்த் திவலை யாகும்
அதி₄ஷ்டா₂ய மனஶ்சாயம் விஷயானுபஸேவதே (15-9)
11 (9) பரம்பொருளே, இவ்வாறு தானே மெய், வாய் எனப் பூத உடல் படைத்து, தன் பகுதியையும் மாயத்தில் ஆழ்த்திக் கொண்டு, உலக வாழ்க்கையை அமைக்கிறான்.
உருவனே ஜீவா தாரம் உருப்பெற வடிவம் எய்தும்
வருமனப் புலனால் சிந்தை வளர்த்தகங் காரம் நெய்தும்
வெறுமனே சாட்சி யாக விளங்கிடக் கடந் தமையும்
விமூடா₄ நானுபஶ்யந்தி பஶ்யந்தி ஜ்ஞானசக்ஷுஷ: (15-10)
12 (10) இதை அறியாமல், தானே செய்வதாக புலன்களும், புலனடக்கம் இல்லாத சீவனும் நினைக்கின்றன. அந்நினைவாலேயே, மீண்டும் பிறவி எடுக்கின்றன.
அகத்தினை ஐந்தறி புலனை ஆக்கிடும் ஐம்பொறி யறிவைப்
புகத்தனை மறந்து எல்லாம் புறத்திலே நடப்ப தாகத்
தகத்தகா மயக்கத் தாலே தாரணி பிறக்கு தய்யா
யதந்தோ(அ)ப்யக்ருதாத்மானோ நைனம் பஶ்யந்த்யசேதஸ: (15-11)
13 (11) இம்மயக்கம் தெளிந்து, ஆன்ம ஞானம் பெற முதலில் உள்ளத்தில் உறுதி வேண்டும். இதையே யோகிகளும் தங்கள் நடைமுறையால் உலகுக்கு உறுதிப்படுத்தினர்.
பள்ளத்துள் பாயும் நீராய்ப் பாய்ந்திடும் உறுதி வேண்டும்
கள்ளத்தை அழித்துத் தரும காரியம் ஆற்றும் யோகச்
செல்வத்தைப் பயிற்சி யாலே சேர்த்திடக் காணக் கூடும்
யச்சந்த்₃ரமஸி யச்சாக்₃னௌ தத்தேஜோ வித்₃தி₄ மாமகம் (15-12)
14 (12) தன்னுளே பிரகாசிக்கும் ஆத்மஞானமே, சூரியனால் வெளிப்படும் புறஉலகைப் புலப்பட வைக்கிறது. அதைப் போன்றது. அது நானே. (கண்ணிருந்தால் என்ன? காண்பதைத் தெளிதல் விவேகமே ஆகும்.)
அறிவைக் காட்டித் திகழும் ஆதவன் மதியும் செந்தீ
தெரிய வைத்த தாரோ தெளியும் சீவன் அன்றோ
விரியப் பரந்த முறை விவேகம் தந்த தன்றோ
15 (புலன்களால் உலகப் பொருட்களைப் பார்த்தாலும், மனமும், அறிவும் ஒன்றாய் ஆராய்ந்து உணர்த்துவது அறிவதற்கு மிகவும் அவசியம். ஆத்மசைதன்யம் என்ற அக ஒளி தான் எதனையும் அறியக் காட்டுகிறது.)
பூத்த ததனால் அன்றோ புலர்ந்தது புவனம் தெளியும்
கோத்த தறிவும் மனமும் கொடுக்கும் புலனும் உணர்வும்
சேர்த்த ததனால் தானே செகத்தில் எதுவும் நிகழ்ந்தது
புஷ்ணாமி சௌஷதீ₄: ஸர்வா: ஸோமோ பூ₄த்வா ரஸாத்மக: (15-13)
16 (13) உலகில் எல்லா உயிர்களுக்கும் நானே ஆதாரம். நிலவொளி பயிரை வளர்ப்பது போல, ஓஜஸம் என்கிற அகவொளியாக நானே அணு முதல் அண்டம் வரை யாவும் வளர்ப்பது.
ஒளிர்வதி லாகும் சக்தி ஓஜஸம் என்னும் யுக்தி
துளிர்வது நானே தெளிக துாலமும் மூலப் பொருளும்
மிளிர்வது மதனால் அறிக மெல்லிய அணுயான் அறிக
ப்ராணாபானஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்வித₄ம் (15-14)
17 (14) நானே பஞ்ச பூதங்களை உணவாயும் உணவின் சுவையாயும் இருக்கச் செய்வேன். பிறகு அவற்றைச் சுவைப்பதும் நானே.
சோற்றில் ஊறம் சுவையும் சுவைக்கும் நான்கு வகையும்
ஆற்றும் பிராண வாயுடன் அபான வாயுவும் கலந்து
ஊற்றும் உணவை ரசித்து உண்ணுதல் நானே உணருக
18 ( என்னுடைய இந்தச் செயலே, உலகில் பூத உடல் வளர்ச்சிக்கும், மாறுதலுக்கும் காரணம்.)
ருசிப்பது நாக்கால் கடித்தால் நயத்தால் விழுங்குதல் ஆகும்
நசிப்பது அபான பிராண நாடியில் நடப்பது ஆகும்
வசிப்பது ஜீரணம் ஆவதால் வளர்வது மேலுடல் ஆகும்
மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞானமபோஹனஞ்ச .
வேதை₃ஶ்ச ஸர்வைரஹமேவ வேத்₃யோ
வேதா₃ந்தக்ருத்₃வேத₃விதே₃வ சாஹம் (15-15)
19 (15) நான் எல்லோருடைய இதயத்திலும் அமர்ந்து, அறிவு, நினைவு முதலியன விதைத்து, அதனால் வேத வேதாந்த நுணுக்கங்களைச் சமைத்தவன். (அதாவது, உடல், பொருள், ஆவி, அறிவு, அறிபொருள் எல்லாம் நானே.)
பின்னமய மான தாகும் பிராணமய கோசம் நானே
மன்னுமன தாலே வைத்த மனோமய கோசம் நானே
என்னுமறி வாகும் உயர்ந்த ஞானமய கோசம் நானே
20 (15) குருவாய் என்னை ஏற்று, என் கோசம் கடந்த நிலை அறிவோர் எனை அடைவோர். (அதாவது, உள்ளே கடந்து இருக்கும் ஆத்ம ஜோதியை, அகமுகப் பார்வையால் உணர்ந்து, அதனுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வதால், கண்டவன், கண்டது என்ற இருநிலை மாறி, காணுகின்ற அறிவொன்றே மிஞ்சும். இதுவே மெய்யறிவு.)
தொடர்ந்த நிலையில் குருவாகத் தோன்றும் சாட்சி யருளாகக்
கடந்து உள்ளே இருப்பதனால் கடவுள் என்றே அறிவார்கள்
நடந்த பாவம் நலிவுறவே நாதன் என்னை அடைவார்கள்
க்ஷர: ஸர்வாணி பூ₄தானி கூடஸ்தோ₂(அ)க்ஷர உச்யதே (15-16)
21 (16) உலகத்தில் அழிபவர், அழியாதவர் என இருவித புருஷர்கள் உண்டு. இவை உயிர்களும், பரம்பொருளுமே. நடத்தையில் இவர்கள், நிழலும், நிஜமும் போலாவர்.
தெரியும் பிர கிருதி தெரிந்த ஜீவன் உடனே
விரியும் மாய நெறி விளங்கும் விஸவேஸ வரன்
புரியும் பிர மிப்பே புவனம் என அறிக
யோ லோகத்ரயமாவிஶ்ய பி₃ப₄ர்த்யவ்யய ஈஶ்வர: (15-17)
22 (17) பரம்பொருளே எல்லா வடிவமும் வகிக்கும் நாயகன். அவனே உலகைப் பலவிதமாகப் படைத்தும், காத்தும் வருகின்ற யோகத்தைச் செய்யும் யோகேஸவரன்.
முடிவும் முதலும் இல்லா மூலன் மாயை யினால்
வடிவம் பல வாறு வகித்துப் படைத் துலகம்
படிவம் எடுத்த தெனும் பாடம் படித் திடுக
23 ( காலம், தேசம் எல்லாம் மாயம் வைத்தது. இதைக் கடந்த கடவுள் ஹரியே என வேதங்கள் கூறுகின்றன.)
சாலச் சமைத்த மாயா ஜாலம் செய்வ தறி
சீலன் பரம ஆத்மா சீவன் இணைத் தருளும்
காலன் ஆவ தறி காக்கும் நேயன் ஹரி
அதோ(அ)ஸ்மி லோகே வேதே₃ ச ப்ரதி₂த: புருஷோத்தம: (15-18)
23 (18) அழிவைக் கடந்த ஆதி நாயகன் நானே. நானே புருஷோத்தமன், நானே நித்தியன்.
நானே அருளும் சத்தியன் நமனை அளக்கும் நேசன்
நானே என்றும் நித்தியன் நாளைக் கடந்த ஹாசன்
நானே பரம முத்தியன் நலனைக் குறிக்கும் ஆசான்
ஸ ஸர்வவித்₃ப₄ஜதி மாம் ஸர்வபா₄வேன பா₄ரத (15-19)
25 (19) குணங்களைக் கடந்து, மயக்கந் தெளிந்து, எவன் என்னை இவ்வாறு அறிகிறானோ, அவனே எல்லாம் அறிந்தவன் ஆகிறான். இந்த உண்மையை அறிய முயல்வதே பிறவிகளின் கடன்.
தெரிந்திடும் பிரதிப் பிம்பம் தெய்வத்தின் உருவம் அதனால்
விரிந்திடும் பிறவிக் கெல்லாம் விளைந்திடும் விரதம் என்னைப்
புரிந்திடும் பூசை ஒன்றே புலனறி வாண்மை நன்றே
26 ( ஆன்ம ஞானம் தேடுவதே உயிர்களுக்கு வைத்த கடமை. இதற்கான யோகப் பயிற்சியினைப் பழகி, தெள்ளிய அறிவைப் பெறுவதே உலகில் பிறந்த உயிர்களுக்குக் கிடைக்கும் பெரும் பேறு.)
அலகிலே காக்கும் ஆன்ம அறிவினை அடைவது ஒன்றே
நிழலிலே தெரியும் உருவை நிஜத்திலே பொருத்திப் பிரம்ம
அழகிலே அமையும் அறிவை அடைவதே பிறவிப் பேறு
ஏதத்₃பு₃த்₃த்₄வா பு₃த்₃தி₄மான்ஸ்யாத்க்ருதக்ருத்யஶ்ச பா₄ரத (15-20)
27 (20) நீ புண்ணியம் செய்திருப்பதால், என்னால் இந்த மஹாரஹஸியம் உனக்குத் தரப்பட்டது. இதனைக் கேட்டு நீ நடந்தால், நினைத்தது நடக்கும்.
நுண்ணிய ரஹஸி யத்தை நூதன அனுப வத்தை
நண்ணிய தாலே நீயும் நலம்பெறக் கூடும் அதனால்
எண்ணிய எண்ணம் ஆகும் ஏற்றுக கடமை என்றான்
ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே₃ புருஷோத்தமயோகோ₃ நாம பஞ்சத₃ஶோ(அ)த்₄யாய: (15)
இவ்வாறு பேராண்மை நெறி எனும் பதினைந்தாம் பாகம் நிறைவுபெறுகிறது