16 Daivasura-sampat Vibhaga Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ ஷோட₃ஶோ(அ)த்₄யாய: . தை₃வாஸுரஸம்பத்₃விபா₄க₃யோக₃:
பாகம் 16 –தேவ, அசுர குண வேறுபாட்டு நெறி
ஶ்ரீப₄க₃வானுவாச .
அப₄யம் ஸத்த்வஸம்ஶுத்₃தி₄ர்ஜ்ஞானயோக₃வ்யவஸ்தி₂தி: .
தா₃னம் த₃மஶ்ச யஜ்ஞஶ்ச ஸ்வாத்₄யாயஸ்தப ஆர்ஜவம் (16-1)
1 ( மூன்று குணங்களின் காரணமாக மனித இனம் தேவர்களைப் போன்றும், அசுரரைப் போன்றும் நடத்தையில் வேறுபட்டு இருப்பதை விளக்கலானார். )
எக்கணம் வாழக் காணும் ஏற்றிடும் அடையா ளத்தைத்
திக்குற வாடுந் தீனன் திருஹரி மாலன் கண்ணன்
மிக்குற மொழியுஞ் சொல்லே மிளிர்வ தாகும் கேட்க
2 ( முன்பு சொன்ன ஸாத்க, ராஜஸ, தாமஸ குணங்களே மனிதரைத் தேவரைப் போன்றும், அசுரரைப் போன்றும் நடத்தச் செய்வதை விளக்குவார். )
மண்மே லமையச் செய்த மனிதரின் தன்மை மாறும்
பொன்னே லன்ன ஏற்றம் பொலியுந் தேவ குணமும்
சின்னஞ் சிறுமை தூற்றச் சேரும் அசுர குணமாம்
ஸ்ரீகிருஷ்ணர் உரை
3 (16-1) அச்சமின்மை, மனச்சுத்தம், அறிவிலும் யோகத்திலும் உறுதி, ஈகை, புலனடக்கம், தியாகம், தவம், நேர்மை முதலியன தேவ குணமாகும்.
எச்சமில்லாத் தருமம் நேர்மை எண்ணத் தறிவும் கருதி
மிச்சமில்லாத் தியாகம் புத்தி மீறலாக தடங்கும் ஆசை
துச்சமில்லாத் தகைமை குணமே துாயதேவர் இனமே என்க
த₃யா பூ₄தேஷ்வலோலுப்த்வம் மார்த₃வம் ஹ்ரீரசாபலம் (16-2)
4 (16-2) அஹிம்ஸை, வாய்மை, சினமின்மை, துறவு, அமைதி, நேர்வழி, கருணை, பேராசையின்மை, மென்மை, வெட்கமுடைமை, தெளிவு முதலியன தேவ குணமாம்.
இல்லாமை வாய்மை கருணை ஈகைபே ராசை யின்மை
செல்லாமை சஞ்ச லத்தால் சிதறாமை வெட்கம் மென்மை
உள்ளாண்மை உடமை குணமே உயர்தேவர் இனமே என்க
ப₄வந்தி ஸம்பத₃ம் தை₃வீமபி₄ஜாதஸ்ய பா₄ரத (16-3)
அஜ்ஞானம் சாபி₄ஜாதஸ்ய பார்த₂ ஸம்பத₃மாஸுரீம் (16-4)
5 (16-3) வலிமை, பொறை, மகிழ்ச்சி, துாய்மை, வெறுப்பின்மை, கர்வமின்மை முதலியன தேவகுணத்தில் பிறப்பன.
இனிமையும் இல்லா தோர்க்கு இலங்கிடும் கருணை நோக்கு
எளிமையும் கர்வம் ஏதும் ஏகிடாத் தரமும் சேரும்
வடிவமும் வாய்க்கும் குணமே வானவர் இனமே என்க
மா ஶுச: ஸம்பத₃ம் தை₃வீமபி₄ஜாதோ(அ)ஸி பாண்ட₃வ (16-5)
6 (16-4-5) பகட்டு, கர்வம், ஆணவம், சினம், கடுமை, அறியாமை ஆகியன அசுர குணமாகும். தேவகுணத்தால் விடுதலையும், அசுர குணத்தால் பந்தமும் ஏற்படுகிறது. விசயா, நீ தேவ குணமுள்ளவனாகப் பிறந்திருக்கிறாய்.
வேணுவர் அசுரத் தன்மை பெற்றவர் ஆவார் அவரால்
காணவும் முடியா தென்னைக் கண்டிடத் தேவர் தன்மை
வேண்டிய உயரிய குணமே விசயாநீ பெற்றது நலமே
த்₃வௌ பூ₄தஸர்கௌ₃ லோகே(அ)ஸ்மிந்தை₃வ ஆஸுர ஏவ ச .
தை₃வோ விஸ்தரஶ: ப்ரோக்த ஆஸுரம் பார்த₂ மே ஶ்ருணு (16-6)
7 (16-6) உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருமே இவ்வாறான தேவ, அசுர குணங்களை ஒட்டியே பிறந்துள்ளனர் என்பதை அறிந்து கொள். இப்போது அசுர குணத்தைப் பற்றி மேலும் சொல்கிறேன்.
தேவ குணத்தை மேலே தெரிந்திடச் சொன்னேன் பிறிதே
ஆவ தாகும் இனமே அசுரத் தன்மையி னளவே
சேர்வ தாகும் நிலைமை செப்pதல் கேட்க இனியே
ந ஶௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்₃யதே (16-7)
8 (16-7) அசுர குணத்தாரிடம் செய்யத்தக்கது எது, செய்யத்தகாதது எது என்பதான நெறிமுறைகள் கிடையாது. அவர்களிடம் நல்லொழுக்கமோ, நன்னடத்தையோ காணக் கிடைப்பதில்லை.
சொல்லத் தகுதி யில்லாச் சொல்லும் உண்மை விட்டுக்
கள்ளத் தனமும் உள்ளம் காணத் தருமம் கெட்டுத்
துள்ளத் துணியும் குணமே துச்சர் அரக்கர் இனமே
அபரஸ்பரஸம்பூ₄தம் கிமன்யத்காமஹைதுகம் (16-8)
9 (16-8) அவர்கள் உலகம் உண்மைக்கிருப்பிடம் இல்லை என்றும், கடவுள் இல்லை என்றும், எல்லாம் காமப் புணர்ச்சியால் மட்டுமே பிறப்பதாயும் நம்புவர்.
கலகம் செய்ய வரும் காமம் புணர்ச்சி யிலே
பலவும் பிறப்ப தெனப் பாடம் நடத்தி மனம்
நிலவும் மடமை யினால் நீசர் அரக்கர் இனம்
ப்ரப₄வந்த்யுக்₃ரகர்மாண: க்ஷயாய ஜக₃தோ(அ)ஹிதா: (16-9)
10 (16-9) அசுர குணமுடையவர்கள், இவ்வாறான மந்த எண்ணத்தால், அற்ப நினைவோடு, கொடிய செயல்களைச் செய்து, உலகிற்கே நாசம் விளைக்கக் காரணமாவார்கள்.
அணியும் போலி மொழியால் அதர்மக் கரும நெறியால்
பனியும் மறைத்த விழியாய்ப் பாவம் படர உலகே
நனியும் நலியச் செய்யும் நாசம் அரக்கர் இனமே
மோஹாத்₃க்₃ருஹீத்வாஸத்₃க்₃ராஹான்ப்ரவர்தந்தே(அ)ஶுசிவ்ரதா: (16-10)
11 (16-10) அத்தகைய மனிதர், அடக்க முடியாத கோபம், காமம், கர்வம், கடுஞ்சொல் கொண்டு, மாசு படிந்த கொள்கையினராய் வாழ்ந்து தர்மத்திற் கொவ்வாக் கடமையைச் செய்து தனக்கும் பிறருக்கும் அழிவை உண்டாக்குவர்.
அடக்க முடியாத கோபம் அள்ள முடியாச் சுடுசொல்
நடக்க லாகா நடத்தை நயத்த லறியா விடத்தை
மடக்க லாகா மனத்தை மறைப்பர் அசுரர் இனமே
காமோபபோ₄க₃பரமா ஏதாவதி₃தி நிஶ்சிதா: (16-11)
12 (16-11) சாகும் வரை, காமத்தையே குறிக்கோளாய்க் கொண்டு, அதனால் எல்லையற்ற துயருக்கும், சிற்றின்பத்துக்கும் ஆளாகி மாள்வர்.
நிரக்கும் குறையில் யோகம் நிலையாமல் அலையும் மோகம்
பிறக்கும் இன்பம் போகம் பிணைக்கும் துன்பம் மனமே
துறக்கும் ஆன்ம நேயம் துார்க்கும் அசுரர் இனமே
ஈஹந்தே காமபோ₄கா₃ர்த₂மன்யாயேனார்த₂ஸஞ்சயான் (16-12)
13 (16-12) அசுர குணம் உடையவர்கள், பலவிதமான நம்பிக்கைகளால் கட்டுண்டு, சினத்திற்கு இடங் கொடுத்து, போகத்தை, காமத்தை அநுபவிப்பதற்காக, தர்மத்தை மீறிய வகையில் சொத்து, சுகம் சேர்க்கச் செயலாற்றுவர்.
யாரு மறியாச் சொத்து ஆவன தாக்கும் முட்கள்
கூறு தலான வாக்கு கோபத் தாலான போக்கு
சேரு தலான பாவம் சேர்க்கும் அசுரர் இனமே
இத₃மஸ்தீத₃மபி மே ப₄விஷ்யதி புனர்த₄னம் (16-13)
14 (16-13) இன்று இதை நான் பெற்றேன், இந்த எண்ணம் ஈடேறும், எதிர்காலத்தில் அது எனதாகும் என்றெல்லாம் மயங்குதல் அசுரர் குணமாகும்.
வென்றுநான் அதனைப் பெறுவேன் வேண்டிய எண்ணம் எல்லாம்
சென்றுநான் அடையச் செய்து சேருவேன் நினைத்த பேறு
என்றுதான் எண்ணத் தாலே ஏங்குதல் அசுரர் இனமே
ஈஶ்வரோ(அ)ஹமஹம் போ₄கீ₃ ஸித்₃தோ₄(அ)ஹம் ப₃லவான்ஸுகீ₂ (16-14)
15 (16-14) இந்த எதிரியை நானே கொன்றேன், மற்றவரை நாளை நானே கொல்வேன், நானே தலைவன், நானே பலசாலி, நானே சுகவாசி என்றெல்லாம் அறிவின்றி மயங்குவதும் …….
உதிரியை மறுநாள் நானே உதிர்த்துக் கொல்வேன் என்றும்
பதவியில் தலைவன் நானே பலசாலி ஆனேன் என்றும்
உதவியில் சித்தும் போகம் உண்மையில் ஞானம் என்றும்
யக்ஷ்யே தா₃ஸ்யாமி மோதி₃ஷ்ய இத்யஜ்ஞானவிமோஹிதா: (16-15)
16 (16-15) நான் பணக்காரன், நல்ல வம்சத்தில் பிறந்தவன், எனக்கு நிகர் யாருமில்லை என்றெல்லாம் இறுமாப்புக் கொண்டு அழிவதும் அசுர குணத்தைக் குறிக்கும்.
இனத்தால் சாதியி னாலே இயற்கையில் மேலோன் என்றும்
மனத்தால் தனக்கு நிகராய் மற்றவர் இல்லை என்றும்
குணத்தால் அழி யும் பிணமாம் கோலத்தால் அசுரர் இனமே
ப்ரஸக்தா: காமபோ₄கே₃ஷு பதந்தி நரகே(அ)ஶுசௌ (16-16)
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே த₃ம்பே₄னாவிதி₄பூர்வகம் (16-17)
17 (16-17) இவ்வாறு பலவிதக் கற்பனைகள் கொண்டு, கர்வம், பிடிவாதம், மயக்கம் கொண்டவர்களாய், வேதங்கள் சொல்லிய தர்மங்களுக்கு எதிராக அசுர குணத்தார் வாழ்க்கையை நடத்துவர்.
அற்பமே யாகும் வழியில் ஆற்றிடும் செயலி னாலும்
சொற்ப அறிவால் மிஞ்சும் சோர்வறி யாமையி னாலும்
தற்பர ஞான வேதம் தாக்குதல் அசுரர் இனமே
மாமாத்மபரதே₃ஹேஷு ப்ரத்₃விஷந்தோ(அ)ப்₄யஸூயகா: (16-18)
18 (16-18) சினமும், மதமும் விளைக்கும் மயக்கத்தால், அசுர குணத்தோர், என்னைத் தனக்குள்ளும் (மனசாட்சியிலும்) வெளியே யும் (நல்லோரிடமும்) கண்டு வெறுக்கின்றனர்.
தாபமும் பழி பாவமும் தடப்பினும் மனச் சாட்சியின்
ருபமும் மெய்க் காட்சி யும் உலகிலே இறை யாவதும்
ஞாபகம் இலா ததால் நசிப்பதும் அசுரர் இனமே
க்ஷிபாம்யஜஸ்ரமஶுபா₄னாஸுரீஷ்வேவ யோனிஷு (16-19)
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யத₄மாம் க₃திம் (16-20)
19 (16-19-20) இவர்கள் மனிதரில் கடையராய்ப் பிறவிக்குப் பின் பிறவி எடுப்பர். மீண்டும் மோசமான நிலைமைக்கே (கொடிய நரகத்திற்கே) செல்வர்.
தந்தேக மாறுவது வரையில் தருமத்தை அழிப்பதுவே நியதி
கெளந்தேயா அறிவாய்நீ அசுரர் கெளரவரே ஆவாரே பிறவி
வந்தேக வடிவங்கள் கோடி வாடுவது பூவுலகில் உறுதி
காம: க்ரோத₄ஸ்ததா₂ லோப₄ஸ்தஸ்மாதே₃தத்த்ரயம் த்யஜேத் (16-21)
20 (16-21) நரகத்திற்கு காமம், கோபம், பேராசை எனும் மூன்று வாசல்கள் உள்ளன. இவை ஆத்மாவை நாசம் செய்யத் தக்கன. எனவே இவற்றை நீ விலக்க வேண்டும்.
பொல்லாத கோபம் ஒன்று பொறாமைத் தீயும் ஒன்று
நில்லாத காமம் திருப்தி நிறைக்காத தாயும் ஒன்று
வல்லான தர்மம் செய்து வைத்தவர் புகல்வர் நன்று
ஆசரத்யாத்மன: ஶ்ரேயஸ்ததோ யாதி பராம் க₃திம் (16-22)
21 (16-22) இந்த மூன்று கொடிய எண்ணங்களை யும் விட்டால் தான், உன்னால் உனது குறிக்கோளினை அடைய முடியும்.
ஆதலால் ஆசை நீக்கு அடையாத பொருளின் மேலே
காதலாம் பொறாமை நீக்கு கைப்படத் தவறிய தாலே
நோதலாம் கோபம் நீக்கு நோய்நீக்கு நன்மை யாக்கு
ந ஸ ஸித்₃தி₄மவாப்னோதி ந ஸுக₂ம் ந பராம் க₃திம் (16-23)
22 (16-23) ஏனெனில் சாத்திர தருமங்களை மீறி, ஆசையின் வேகத்தால் செய் யும் செயலால், நல்ல கதியையோ, உயர்ந்த குறிக்கோளையோ யாராலும் அடைய முடியாது.
பாத்திர முறையும் விட்டுப் படித்தவர் உரையும் விட்டு
நேத்திர வழியில் செல்ல நெறிமுறை தவறிச் செல்ல
ஆத்திக மழியும் இலக்கு அடைவது முடியாப் போகும்
ஜ்ஞாத்வா ஶாஸ்த்ரவிதா₄னோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி (16-24)
23 (16-24) எனவே செய்யத் தக்கது எது, செய்யத் தகாதது எது என்று பார்க்க சாத்திரங்களும், சாத்திரங்களறிந்த பெரியோர்களும், உனக்கு என்றும் ஆதாரமாக இருக்கட்டும். அவற்றின்படியே நீ கடமையைச் செய்து உயரிய நிலை அடைவாய்.
வரிந்ததை வழியாய் வைத்து வாழ்விலே நேர்த்திடு கருமம்
அறிந்ததை அழகாய்ச் செய்க அறியாத போதே பெரியோர்
பரிந்துரை பயிலச் செல்க பக்குவம் அறிக என்றான்
Iti Srimad Bhagavadgeetaasoopanishatsu Brahmavidyaayaam
Yogashaastre Sri Krishnaarjunasamvaade
Daivaasurasampadvibhaagayogo Naama Shodasho’dhyaayah
ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
தை₃வாஸுரஸம்பத்₃விபா₄க₃யோகோ₃ நாம ஷோட₃ஶோ(அ)த்₄யாய: (16)
இவ்வாறு தேவ, அசுர குண வேறுபாட்டு நெறி எனும் பதினாறாம் பாகம் நிறைவுபெறுகிறது