Sri Kanchi Maha Pervia – Prayer 3
ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் துதி
வெட்கமோ குருவே தங்கள்
விழிமலர் நிலத்தைக் காணப்
புட்பமாம் முகத்தில் திங்கள்
புன்னகை இதழில் நாண
நுட்பமாய் அமையும் உங்கள்
நூதன வடிவில் கண்டோம்!
அற்புதம் அடியைத் தாங்கும்
அடியரைக் காணத் தானே!
ஏன் எந்தை கண்கள் தாழும்!
எழிலடி பணிவார்க் காகத்
தான் அந்தக் கண்கள் வாழும்!
தளிர்விழிக் கருணை யாலும்
வான்வளம் தந்தன் பாலும்
வழித்துணை தந்தும் ஆளும்!
நாமிதம் கண்ட தாலும்
நம்துணை குருவின் பாதம்!