Sri Veda Vyasar Sthuti
பரமகுரு வேத வியாஸர் துதி
உஓம் குருப்யோ நம:
மாமுனி வேத வியாஸ – மஹரிஷி குருவே! போற்றி!
மறைகளைப் பகுத்துக் காத்த – மாதவா! போற்றி! போற்றி!
தூமணி ஆசா ரியர்கள் – தொடர்முத லானாய் போற்றி!
துணையருட் த்வைபா யணரே! – தூயரே! போற்றி! போற்றி
நாரண னான தேவா! – நரமுனி ஸ்ரேஷ்டா! போற்றி!
நன்மறைக் காவ லான – நாதனே! போற்றி! போற்றி!
பூரண மானப் பிரம்மப் – பொருள்விதை தந்தாய் போற்றி!
புகலருட் பிரம்ம சூத்ரப் – போதனே! போற்றி! போற்றி!
மாபெரும் மாபார தமாய் – மறைவிளக் கானாய் போற்றி!
மகுடமாய் பகவத் கீதை! – மாலனே! போற்றி! போற்றி!
பாபமும் இருளும் போக்கும் – பாதரா யணரே போற்றி!
பயனருட் குருபரம் பரையின் – பால்நிலா! போற்றி! போற்றி!
பாகவத மாகும் வேதப் – பாடநூல் செய்தாய் போற்றி!
பதினெண் புராணம் நூற்ற – பாவலா! போற்றி! போற்றி!
யோகமும் பக்தி ஞான – யுத்தியும் நெய்தாய் போற்றி!
யுகதர்ம சாட்சி யான – உத்தமா! போற்றி! போற்றி!
கோதிலாக் குருவே போற்றி! – குருமணித் திலகா போற்றி!
வேதியா விமலா போற்றி! – விஷ்ணுவின் வடிவா போற்றி!
ஆதியாம் மௌன பீடம் – அருள்வழிக் குருவே போற்றி!
சோதியாம் தட்சிண மூர்த்திச் – சுடரடி போற்றி! போற்றி!
மீ. ரா
19-1-2023