Log in to download as PDF

Shri Shiva Bhujangam

ஸ்ரீ சுப்ரமண்யபுஜங்கம்

सदा बालरूपापि विघ्नाद्रिहन्त्री
महादन्तिवक्त्रापि पञ्चास्यमान्या ।
विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे
विधत्तां श्रियं कापि कल्याणमूर्तिः ॥ १ ॥
ஸதா₃ பா₃லரூபாபி விக்₄நாத்₃ரிஹந்த்ரீ
மஹாத₃ந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா ।
விதீ₄ந்த்₃ராதி₃ம்ருக்₃யா க₃ணேஶாபி₄தா₄ மே
வித₄த்தாம் ஶ்ரியம் காபி கல்யாணமூர்தி: ॥ 1 ॥
sadā bālarūpāpi vighnādrihantrī
mahādantivaktrāpi pañcāsyamānyā ।
vidhīndrādimr̥gyā gaṇēśābhidhā mē
vidhattāṃ śriyaṃ kāpi kalyāṇamūrtiḥ ॥ 1 ॥
(Salutations to the Lord of auspicious form)
Who forever looks like a child, yet destroys the mountains of grief ;
Who has Elephant-FACE with a huge tusk, yet revered by Five-faced Shiva;
Who is ardently beseeched by Brahma, Indra and alike, Who is ‘Ganapathy’
to me; may He, the Lord of auspicious form, bestow the best! (1)
என்றும் இள வடிவும் இடர்மலையும் பொடி படவும்
தண்டும் கரி முகமும் ஐமுகனும் தொழு நிதியம்
மன்றும் அய னமரன் முனிபணியும் கண பதியும்
நன்றென் நல மருளும் நயவடிவைத் தொழு வேனே (1)
எப்போதும் இளமை வடிவாயிருந்தும், மலைபோன்ற துயரங்களையும் பொடியாக்குபவரும்; பெரும் தந்தமுடன் விளங்கும் யானை முகத்தைக் கொண்டிருப்பினும், ஐந்து முகமுடைய சிவபெருமானும் மதிக்கின்ற பெருமை கொண்டவரும், பிரம்மன், தேவேந்திரன், முனிவர்கள் முதலானோர் இறைஞ்சித் தொழுகின்ற கணபதியாகியவர் எனக்கு; நன்மையினை அருளியச் செய்ய, அன்னாரின் புனித வடிவினைத் தொழுகின்றேன். (1)
न जानामि शब्दं न जानामि चार्थं
न जानामि पद्यं न जानामि गद्यम् ।
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ॥ २ ॥
ந ஜாநாமி ஶப்₃த₃ம் ந ஜாநாமி சார்த₂ம்
ந ஜாநாமி பத்₃யம் ந ஜாநாமி க₃த்₃யம் ।
சிதே₃கா ஷடா₃ஸ்யா ஹ்ருதி₃ த்₃யோததே மே
முகா₂ந்நி:ஸரந்தே கி₃ரஶ்சாபி சித்ரம் ॥ 2 ॥
na jānāmi śabdaṃ na jānāmi cārthaṃ
na jānāmi padyaṃ na jānāmi gadyam ।
cidēkā ṣaḍāsyā hr̥di dyōtatē mē
mukhānniḥsarantē giraścāpi citram ॥ 2 ॥
I know neither Words, nor their Meanings;
I know neither Poetry, nor Prose; (yet)
Within the depth of my Heart, I see the Effulgence of Thine Six Faces;
by which, these various verses pour forth through my Mouth!
(Salutations to the Lord Muruga!) (2)
சொற்சீர் வள மறியேன் சுடர்ஞானப் பொரு ளறியேன்
நற்சீர் கவி யறியேன் நகுமுரையின் நடை யறி யேன்
கற்பூர மென மனதுட் காணுமுன தாறு முகப்
பொற்பூற வரும் கவிதை பொழிவாயென் பெரும் பேறு! (2)
(நல்ல) சொற்களை நான் அறியவில்லை!
(நற்) சொற்களில் பொதிந்த மெய்யறிவினையும் நான் அறியவில்லை! (எனினும்) எனது உள்ளத்தின் (ஆழத்தில், கற்பூரமென) ஒளிவிட்டுக் கொண்டிருக்கும், நினது ஆறு முகங்களின் அருளினால்,
பல்வேறான பாடல்களை என் வாய் பொழிகின்றது!
(அத்தகு அருள்மிகு முருகப்பெருமானைத் தொழுகிறேன்) (2)
मयूराधिरूढं महावाक्यगूढं
मनोहारिदेहं महच्चित्तगेहम् ।
महीदेवदेवं महावेदभावं
महादेवबालं भजे लोकपालम् ॥ ३ ॥
மயூராதி₄ரூட₄ம் மஹாவாக்யகூ₃ட₄ம்
மனோஹாரிதே₃ஹம் மஹச்சித்தகே₃ஹம் ।
மஹீதே₃வதே₃வம் மஹாவேத₃பா₄வம்
மஹாதே₃வபா₃லம் ப₄ஜே லோகபாலம் ॥ 3 ॥
mayūrādhirūḍhaṃ mahāvākyagūḍhaṃ
manōhāridēhaṃ mahaccittagēham ।
mahīdēvadēvaṃ mahāvēdabhāvaṃ
mahādēvabālaṃ bhajē lōkapālam ॥3 ॥
Salutations to the Lord Muruga)
Who is mounted on a Peacock in divine form
Implying the deepest import of Maha Vakyas in Upanishads;
With the body of Heart-Stealing beauty (forever) embellished
within the seat of Consciousness; the Great God of Devas,
The import of Vedas; the Son of Mahadeva, the Protector of the World! (3)
மயில்மேவும் எழிற்கோலன் மாவாக்ய மூலன்
ஒயில்மேனி மனம்ஆளும் உணர்வான தீபன்
பயில்வான வரின்நாதன் பழம்வேத போதன்
கயிலாயர் மகன்ஞாலம் காப்பானைத் தொழுவேன்! (3)
மயிலில் அமர்ந்திருப்பவரும், மறைகளின் மஹாவாக்கியங்கள் உணர்த்தும் உண்மையின் வடிவானவரும், மனதைக் கவரும் அழகிய உருவத்துடன், (எப்போதும் நமது) உள்ளத்தின் ஆழத்தில் ஒளிர்பவரும், எல்லாத் தேவர்களுக்கும் தேவராக விளங்குபவரும், வேதங்களின் சாரமாக இருப்பவரும், மஹாதேவராகிய பரசிவனின் பாலகரும், உலகைக் காப்பவருமான (அருள்மிகு முருகப் பெருமானைத்) தொழுகிறேன்! (3)
यदा संनिधानं गता मानवा मे
भवाम्भोधिपारं गतास्ते तदैव ।
इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते
तमीडे पवित्रं पराशक्तिपुत्रम् ॥ ४ ॥
யதா₃ ஸம்நிதா₄னம் க₃தா மானவா மே
ப₄வாம்போ₄தி₄பாரம் க₃தாஸ்தே ததை₃வ ।
இதி வ்யஞ்ஜயன்ஸிந்து₄தீரே ய ஆஸ்தே
தமீடே₃ பவித்ரம் பராஶக்திபுத்ரம் ॥ 4 ॥
yadā saṃnidhānaṃ gatā mānavā mē
bhavām bhōdhipāraṃ gatāstē tadaiva ।
iti vyañjayansindhutīrē ya āstē
tamīḍē pavitraṃ parāśaktiputram ॥ 4 ॥
‘Whoever reach my divine-presence (by offering total surrender to me);
they (all) indeed transcend the Ocean of Samsara’ – Proclaiming thus,
You are manifesting on the sea- shore (of Tiruchendur),
Bestowing grace upon us (as our succour),
O the Ever-Pure Son of Parashakti, May I pay my obeisance to You! (4)
அருட்சந்நி தானத்தை அடைந்தார்கள் யாரும்
இருட்கொண்ட பிறவாழி இலரென்று ஓதும்
திருச்செந்தூர்க் கரைகொண்ட திருக்கா வலான
அருட்சக்தி பாலாநின் அடியேந்தி னேனே! (4)
“(முற்றிலும் என்னைச் சரணடைவதன் பயனாக)
எனது அருட் சந்நிதியை அடைபவர்கள் எல்லோரும்,
“சம்ஸார சாகரம்” எனும் துயரக் கடலைக் கடந்தவர்களானார்கள்”
எனும் உறுதியை முழங்குவராகத் தங்களின் அருள்வடிவம்
(திருச்செந்தூரின்) கடற்கரையில் (எம்மைக் காப்பவராக) விளங்குகிறது.
எப்பொழுதும் புனிதராகப் பராசக்தியின் மகனாக விளங்கும் தங்களை
யான் எப்பொழுதும் தொழுவேனாக! (4)

यथाब्धेस्तरङ्गा लयं यन्ति तुङ्गाः
तथैवापदः सन्निधौ सेवतां मे ।
इतीवोर्मिपंक्तीर्नृणां दर्शयन्तं
सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥५॥
யதா₂ப்₃தே₄ஸ்தரங்கா₃ லயம் யாந்தி துங்கா₃:
ததை₂வாபத₃: ஸம்நிதௌ₄ ஸேவதாம் மே ।
இதீவோர்மிபங்க்தீர்ந்ருணாம் த₃ர்ஶயந்தம்
ஸதா₃ பா₄வயே ஹ்ருத்ஸரோஜே கு₃ஹம் தம் ॥ 5 ॥
yathābdhēstaraṅgā layaṃ yānti tuṅgā:
tathaivāpadaḥ saṃnidhau sēvatāṃ mē ।
itīvōrmipaṅktīrnr̥ṇāṃ darśayantaṃ
sadā bhāvayē hr̥tsarōjē guhaṃ tam ॥ 5 ॥
“As the rising waves of the Sea get dissolved within the Sea,
the rising calamities of devotees, Who come to My presence, dissolve!”
Thus You proclaim showing the rows of waves on the Sea (at Your abode)
May I, forever within the lotus of my heart,
Meditate upon You, O Guha! (5)
“எழுமாழி அலையந்து விழுமோயு மதுபோல்
தொழுவாரின் துயரெந்தன் அடிசாய வழியும்”
பழுவேத மிதுவென்று கடல்காட்டு கின்றாய்!
விழுதேயென் மலருள்ளம் விளைவாயே குஹனே! (5)
“(முற்றிலும் என்னைச் சரணடைவதன் பயனாக)
எப்படிக் கடலில் எழும் அலைகள் கடலிலேயே அழிந்துவிடுமோ,
அப்படியே எனது அருட் சந்நிதியை அடைபவர்களின் துயர அலைகளும் அழிகின்றன” எனும் உறுதியை முழங்குவராகத்
(திருச்செந்தூரின்) திரளும் கடலலையைக் காட்டுகிறீர்கள்.
ஓ குஹா! எனது இதயமலரில் தங்களையே
யான் எப்பொழுதும் தியானிப்பேனாக! (5)
गिरौ मन्निवासे नरा येऽधिरूढाः
तदा पर्वते राजते तेऽधिरूढाः ।
इतीव ब्रुवन्गन्धशैलाधिरूढः
स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥ ६ ॥
கி₃ரௌ மந்நிவாஸே நரா யே(அ)தி₄ரூடா₄:
ததா₃ பர்வதே ராஜதே தே(அ)தி₄ரூடா₄: ।
இதீவ ப்₃ருவன்க₃ந்த₄ஶைலாதி₄ரூட₄:
ஸ தே₃வோ முதே₃ மே ஸதா₃ ஷண்முகோ₂(அ)ஸ்து ॥ 6 ॥
girau mannivāsē narā yē(a)dhirūḍhāḥ
tadā parvatē rājatē tē(அa)ஆஅdhirūḍhāḥ ।
itīva bruvangandhaśailādhirūḍhaḥ
sa dēvō mudē mē sadā ṣaṇmukhō’stu ॥ 6 ॥
“Those who ascend the Hills of My Abode (with true devotion);
Thereby ascend the Great Silvery Mountain (Mount Kailash)
which leads to the path of Liberation” – Proclaiming thus,
You are abiding on the Sugandha Hill!
May I forever be in Thine blissful contemplation, O my Lord Shanmukha! (6)
மலையுச்சி கண்டாரின் நிலைவெள்ளி சூடும்
மலையுச்சி கொண்டாடும் நிலைமுக்தி கூடும்
கலையச்சி லிட்டாற்போல் கமழும்சு கந்த
மலையப்ப னேயென்னுள் நிலையாறு முகனே! (6)
“(உண்மையான பக்தியுடன்) யானிருக்கும் மலையுச்சியை அடைபவர்கள்,
(அப்படிச் சரணடைவதன் பயனாக), முக்தியாகிய முழுமையை அடையும் பாதையைத் தரும் வெள்ளி(ப்பனி)யால் கோலமிட்ட மலையுச்சியை அடைந்தவராகிறார்கள்” – இப்படிக் கூறுவதுபோல்
நறுமணம் மிக்க மலைத்தலத்தில் அருள்பாலிக்கும் ஓ ஆறுமுகரே, நிறைவுதரும் தங்களின் தியானத்திலேயே
எனது மனம் எப்பொழுதும் விளங்கட்டும்! (6)
महाम्भोधितीरे महापापचोरे
मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।
गुहायां वसन्तं स्वभासा लसन्तं
जनार्तिं हरन्तं श्रयामो गुहं तम् ॥ ७ ॥
மஹாம்போ₄தி₄தீரே மஹாபாபசோரே
முனீந்த்₃ரானுகூலே ஸுக₃ந்தா₄க்₂யஶைலே ।
கு₃ஹாயாம் வஸந்தம் ஸ்வபா₄ஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ஶ்ரயாமோ கு₃ஹம் தம் ॥ 7 ॥
mahāmbhōdhitīrē mahāpāpacōrē
munīndrānukūlē sugandhākhyaśailē ।
guhāyāṃ vasantaṃ svabhāsā lasantaṃ
janārtiṃ harantaṃ śrayāmō guhaṃ tam ॥ 7 ॥
(Your Abode) the Shores of the Great Sea, the Place that robs away
the unbearable sins (of devotees); that which is beseeched by virtuous Seekers, That which is known as the hill of enchanting fragrance (of Thine grace),
the Place where Lord Guha Abides in His Own Splendour,
the Place that removes the distress (of darkness) – that I know
as my place of refuge O Guha, (May You bestow Thine grace!)
பெருவினை திருடிப் போகும் பேரருட் கடலின் தீரம்
ஒருமுனைப் படுவர் நாடும் உகுமணம் கமழும் கூடம்
திருமிகு குஹனின் பீடம் தேயொளி மிளிரும் மாடம்
இருளறு புகலறிந் தேனே! எமக்கருள் குஹமுரு கோனே! (7)
பெருங்கடலின் கரையாகவும், (அடியார்கள்) பெருவினைகளைக் கொள்ளை கொள்ளும் இடமாகவும், ஒருமுனைப்படும் முனியோர்கள் நாடும் இடமாகவும், “அருள் மணம் வீசும் மலை” எனப் புகழப்படுவதும்,
தனதொளியாலே பிரகாசித்து ஆழ்ந்து ஒளிரும் குஹனின் இடமானதும், இருளாகிய துயரங்களை அழிப்பதுமான நினது இருப்பிடத்தையே
“எனது புகல்” என அறிந்தேன்! ஓ குஹா! ( எமக்கு அருள் செய்வீராக!) (7)
लसत्स्वर्णगेहे नृणां कामदोहे
सुमस्तोमसञ्छन्नमाणिक्यमञ्चे ।
समुद्यत्सहस्रार्कतुल्यप्रकाशं
सदा भावये कार्तिकेयं सुरेशम् ॥ ८ ॥
லஸத்ஸ்வர்ணகே₃ஹே ந்ருணாம் காமதோ₃ஹே
ஸுமஸ்தோமஸஞ்ச₂ன்னமாணிக்யமஞ்சே ।
ஸமுத்₃யத்ஸஹஸ்ரார்கதுல்யப்ரகாஶம்
ஸதா₃ பா₄வயே கார்திகேயம் ஸுரேஶம் ॥ 8 ॥
lasatsvarṇagēhē nr̥ṇāṃ kāmadōhē
sumastōmasañchannamāṇikyamañcē ।
samudyatsahasrārkatulyaprakāśaṃ
sadā bhāvayē kārtikēyaṃ surēśam ॥ 8 ॥
May I forever meditate upon the from of Sri Kartikeya
Who is on the lustrous golden stage of the shining temple
that is filled with the heaps of flowers and glittering garlands of various Gems;
Who Himself Shining with the Effulgence of Thousand Suns and
Who is the Lord of Devas! (8)
பொன்னொளி மேடை நின்றாய்! நின்னடி யாரின் நன்றாய்
நன்மணி மாலை கொண்ட இன்னருட் கோவில் கண்டாய்!
தன்னொளி சோதிப் பந்நூ றென்றொளிர் வாயென் னுள்ளாய்!
நன்னருட் தேவர் தேவா! நின்றருள்் கார்த்தி கேயா! (8)
பொன்னொளி மின்னும் பீடத்தில், அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்ற, மலர்க் குவியலும் பல்வேறு மணியாரங்களும் பதிந்து மிளிரும் ஆலயத்தில், ஆயிரம் சூரியனாகத் தனது அகவொளியால் பிரகாசித்து அருள்பாலிப்பவரும், தேவர்களின் தலைவருமான திரு கார்த்திகேயரின் வடிவை
யான் எப்பொழுதும் தியானிப்பேனாக! (8)
रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे
मनोहारिलावण्यपीयूषपूर्णे ।
मनःषट्पदो मे भवक्लेशतप्तः
सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥ ९ ॥
ரணத்₃த₄ம்ஸகே மஞ்ஜுலே(அ)த்யந்தஶோணே
மனோஹாரிலாவண்யபீயூஷபூர்ணே ।
மன:ஷட்பதோ₃ மே ப₄வக்லேஶதப்த:
ஸதா₃ மோத₃தாம் ஸ்கந்த₃ தே பாத₃பத்₃மே ॥ 9 ॥
raṇaddhaṃsakē mañjulē’tyantaśōṇē
manōhārilāvaṇyapīyūṣapūrṇē ।
manaḥṣaṭpadō mē bhavaklēśataptaḥ
sadā mōdatāṃ skanda tē pādapadmē ॥ 9 ॥
Thine divine feet with jingling anklets are charming,
(Thy) Reddish feet are so lovely and heart-stealing.
On those Elixir-filled Six pair of Feet (in Your Six Abodes),
May I, who is afflicted with distress and the Heat of Samsāra
Rejoice forever, O Skanda, Keep my mind on Thy Lotus Feet! (9)
கொஞ்சுங் கழல் செஞ்சே வடி நெஞ்சும் பறிபோக
உஞ்சும் நலம் அமுதப் பதம் தஞ்சம் அறுசோடி
கெஞ்சும் மனத் தாபம் வினைப் பாவம் சுடக்காயும்
தஞ்சம் புகும் எந்தன் தவம் கந்தன் மலர்க்காலே! (9)
கொஞ்சும் சலங்கை அணிந்த, அழகானை சிவந்த பாதங்கள்,
மனதைக் கொள்ளை கொள்ளுவனாக விளங்குகின்றன;
அமுதம் நிரம்பிய் ஆறு ஜோடிப் பாதங்களில் (அறுபடை வீட்டில்),
மனத் துயராலும், ஊழ்வினை வெப்பத்தாலும் பரிதவிக்கும் யான்,
எப்போதும் தஞ்சம் (சுகம்) அனுபவிக்கட்டும்! ஓ கந்தப் பெருமானே!
எனது மனம் நினது மலரடிகளிலேயே நிலைக்க அருள்செய்யுங்கள்! (9)
सुवर्णाभदिव्याम्बरैर्भासमानां
क्वणत्किङ्किणीमेखलाशोभमानाम् ।
लसद्धेमपट्टेणन विद्योतमानां
कटिं भावये स्कन्द ते दीप्यमानाम् ॥ १० ॥
ஸுவர்ணாப₄தி₃வ்யாம்ப₃ரைர்பா₄ஸமானாம்
க்வணத்கிங்கிணீமேக₂லாஶோப₄மானாம் ।
லஸத்₃தே₄மபட்டேன வித்₃யோதமானாம்
கடிம் பா₄வயே ஸ்கந்த₃ தே தீ₃ப்யமானாம் ॥ 10 ॥
suvarṇābhadivyāmbarairbhāsamānāṃ
kvaṇatkiṅkiṇīmēkhalāśōbhamānām ।
lasaddhēmapaṭṭēna vidyōtamānāṃ
kaṭiṃ bhāvayē skanda tē dīpyamānām ॥ 10 ॥
Clad in Divine Clothes which are Shining with the Lustre of Gold;
And wearing on the Waist a beautiful Girdle with Tinkling small bells;
Along with a Golden Silk Cloth that is flashing like lightning
O Skanda, I Meditate on Your Waist, May You Enlighten! (10)
பொன்னிலுடை புனைவாய்! பொன்னெனவும் ஒளிர்வாய்!
கன்னலிடை கொஞ்சுமிழைச் சன்னமணி மிளிர்வாய்!
மின்னலொளி யெனவாய்ப் பொன்துகிலும் அணிவாய்!
அன்னயெழில் என்மனதுள் கந்தனருள் கனிவாய்! (10)
பொன்னொத்த தூய அடைகள் அணிந்ததால் பொன்னாக ஒளிர்கின்றாய். இடையில் சிறு மணிகள் பதித்த பொன் ஒட்டியாணத்தை அணிந்து மிளிர்கிறாய். அத்துடன் மின்னலென ஒளிரும் பொன்பட்டுத் துகிலையும் அணிந்துள்ளாய். அந்த இடுப்பின் எழிலில் என்மனம் தியானிக்கிறது! ஓ கந்தப் பெருமானே கருணை செய்யுங்கள்! (10)
पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग-
-स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् ।
नमस्याम्यहं तारकारे तवोरः
स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥ ११ ॥
புலிந்தே₃ஶகன்யாக₄நாபோ₄க₃துங்க₃:
தனாலிங்க₃னாஸக்தகாஶ்மீரராக₃ம் ।
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:
ஸ்வப₄க்தாவனே ஸர்வதா₃ ஸானுராக₃ம் ॥ 11 ॥
pulindēśakanyāghanābhōgatuṅga:
tanāliṅganāsaktakāśmīrarāgam ।
namasyāmyahaṃ tārakārē tavōraḥ
svabhaktāvanē sarvadā sānurāgam ॥ 11 ॥
In the way You embraced the Pulinda Tribe Woman of big and strong ;
Bosom, the result of which Your Chest became Red like Saffron;
I Bow down to You, O the Enemy of Taraka, and Who is extremely Powerful,
May You, Who are the Joy of the Devotees,
Extend the same courtesy (grace) towards Your Devotees also, always! (11)
புலிந்தவன நங்கையளைப் பூத்தபெருங் கொங்கையளை
வலிந்தணைத்துக் குங்குமத்தை வார்த்தமணி மார்போனே!
மெலிந்துபணிந் தேன்வீரா மேலோய்!தா ரகசூரா!
நலிந்தடியர்க் கவ்வணைப்பை நாளும்நீ தாராயோ! (11)
புலிந்த மரபில் வந்தவளும், வட்டமான, உறுதியான மார்பகங்களைக் கொண்டவளுமான (ஸ்ரீ வள்ளியாகிய) நங்கையை ஆரத்தழுவியதால், குங்குமத்தால் சிவந்த மார்பினைக் கொண்ட பெம்மானே! யான் தழைந்து பணிகின்றேன்! ஓ வலிமை மிக்கவரே! தாரகாசுரனை அரிந்த சூரரே!, அடியார்களின் இன்பமாகிய மேலோய்! (நலிவுறும்) நல்லடியார்களுக்கும் அத்த்கைய அரவணைப்பை எப்போதும் அருளித் தாரீரோ! (11)
विधौ क्लुप्तदण्डान्स्वलीलाधृताण्डा-
-न्निरस्तेभशुण्डान्द्विषत्कालदण्डान् ।
हतेन्द्रारिषण्डान् जगत्राणशौण्डा-
-न्सदा ते प्रचण्डान् श्रये बाहुदण्डान् ॥ १२ ॥
விதௌ₄ க்லுப்தத₃ண்டா₃ன்ஸ்வலீலாத்₄ருதாண்டா₃-
-ந்நிரஸ்தேப₄ஶுண்டா₃ந்த்₃விஷத்காலத₃ண்டா₃ன் ।
ஹதேந்த்₃ராரிஷண்டா₃ன் ஜக₃த்ராணஶௌண்டா₃-
-ந்ஸதா₃ தே ப்ரசண்டா₃ன் ஶ்ரயே பா₃ஹுத₃ண்டா₃ன் ॥ 12 ॥
vidhau kluptadaṇḍānsvalīlādhr̥tāṇḍā-
-nnirastēbhaśuṇḍāndviṣatkāladaṇḍān ।
hatēndrāriṣaṇḍān jagatrāṇaśauṇḍā-
-nsadā tē pracaṇḍān śrayē bāhudaṇḍān ॥ 12 ॥
The Arms which effected the punishment to Lord Brahma,
the Arms which support the Universe as divine-sport;
the Arms which drove off the Elephant,
the Arms which are like the staff of death to the evil;
the Arms which destroyed the multitude of enemies of Indra, and
the Arms which are skilled in protecting the World –
I Always take Refuge in Your Formidable Arms, (O Muruga)! (12)
பிரமனை உறுத்துந் தோள்கள்! பெருவுல கிருத்்துந் தோள்கள்!
விரமலி விலக்குந் தோள்கள்! விடரிடர் அழிக்கும் தோள்கள்!
சுரரிடர் முடிக்குந் தோள்க!ள் சுடருல கமைக்கும்் தோள்கள் !
பரசுகப் புகலுன்் தோளிற் பதிகிறேன் சுகமருள் முருகா! (12)
பிரம்மனுக்கு அறிவுறுத்தத் தண்டனையை நிலைநாட்டிய தோள்கள்,
உலகைக் காக்கின்ற திருவிளையாடலைச் செய்கின்ற தோள்கள்,
(ஸ்ரீ வள்ளிக்காக) யானையை (விரமலி) வழி விலக்கிய தோள்கள்,
விடமான தீயவர்களுக்கு அழிவைத் தரும் தோள்கள்,
தேவர்களின் எதிரிகளையும் முடித்த தோள்கள்,
உலகத்தை ஒளியுடன் நடத்தும் தோள்கள் –
பேரின்பம் அளிக்கும் நின் தோள்களில், முருகா, யான் புகலடைகி்றேன். (12)
सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः
समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।
सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीना-
-स्तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥ १३ ॥
ஸதா₃ ஶாரதா₃: ஷண்ம்ருகா₃ங்கா யதி₃ ஸ்யு:
ஸமுத்₃யந்த ஏவ ஸ்தி₂தாஶ்சேத்ஸமந்தாத் ।
ஸதா₃ பூர்ணபி₃ம்பா₃: கலங்கைஶ்ச ஹீனா-
-ஸ்ததா₃ த்வன்முகா₂னாம் ப்₃ருவே ஸ்கந்த₃ ஸாம்யம் ॥ 13 ॥
sadā śāradāḥ ṣaṇmr̥gāṅkā yadi syuḥ
samudyanta ēva sthitāścētsamantāt ।
sadā pūrṇabimbāḥ kalaṅkaiśca hīnā-
-stadā tvanmukhānāṃ bruvē skanda sāmyam ॥ 13 ॥
If there are Six Autumn Moons that continuously shine,
Rising together, side by side giving Splendour as a Continuous Whole,
Glowing with full brightness without having any blemish,
Even then, only for the name’s sake, they can be compared to Your Face
O Skanda, as they don’t to Thine Real Splendour! (13)
இலாயிலை யுதிருங் காலம் நிலாஅறு வடிவிற் கோலம்
உலாவரும் அருகிற் கூடிப் பலாவளி ஒளியைச் சூடிக்
குலாவினும் அவையுட் காயம் இலாதினும் பெயருக் காயும்
கலாபனின் முகமொக் கின்றார்! கந்தனோ ஒளியிற் குன்றார்!
இலையுதிர் காலத்தில் ஆறு நிலவுகள் தொடர்ந்து பிரகாசித்தாலும்,
ஒன்றாகத் தோன்றி அருகருகிருந்து தொடர்ச்சியான ஒளி தந்தாலும்
களங்கமற்றதான பூரண நிலவாக வெண்மை பூத்தாலும்்,
அவற்றை நினது முகமாக ஒப்புமை கொள்வது பெயரளவில்தான்!
கந்தா, நினது உண்மையான பேரொளிக்கு ஈடாகுமோ! (12)
स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्च-
-त्कटाक्षावलीभृङ्गसङ्घोज्ज्वलानि ।
सुधास्यन्दिबिम्बाधराणीशसूनो
तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥ १४ ॥
ஸ்பு₂ரன்மந்த₃ஹாஸை: ஸஹம்ஸானி சஞ்ச-
-த்கடாக்ஷாவலீப்₄ருங்க₃ஸங்கோ₄ஜ்ஜ்வலானி ।
ஸுதா₄ஸ்யந்தி₃பி₃ம்பா₃த₄ராணீஶஸூனோ
தவாலோகயே ஷண்முகா₂ம்போ₄ருஹாணி ॥ 14 ॥
sphuranmandahāsaiḥ sahaṃsāni cañca-
-tkaṭākṣāvalībhr̥ṅgasaṅghōjjvalāni ।
sudhāsyandibimbādharāṇīśasūnō
tavālōkayē ṣaṇmukhāmbhōruhāṇi ॥ 14 ॥
With the gentle and lustrous smile like a group of swans moving joyfully,
With the side-glances like a group of bees shining with splendour,
And the lips like the red Coccinia fruit full of nectar,
O the Son of the Lord of Earth,
Within my Heart I Behold Your Six Faces which blossom like Six Lotuses! (14)
ஒளிரும் இள முறுவல் நடை பயிலும் குழுஅன்னம்
மிளிரும் கடை விழிகள் இசை பொழியும் மதுவண்டு
நெளியும் இதழ் கோவைக் கனியமுதம் சிவசுதனுன்
நளினம் அறு முகமென் மனம் முனியும் அறுமலரே! (14)
மகி்ழ்வுடன் அசையும் அன்னக் கூட்டம் போன்ற ஒளிரும் புன்னகையும், ரீங்காரமிடும் தேனீக்கள் போன்ற சுடர்விடும் கடைக்கண் பார்வையும்,
அமுதூறும் சிவந்த கொவ்வைக் கனியான அதரங்களும் கொண்ட
ஓ சிவபிரானின் செல்வனே, நினது ஆறுமுகங்களையும்
எனது மனதினுள் மலரும் ஆறு தாமரைகளாகத் தியானிக்கிறேன்! (14)
विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं
दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु ।
मयीषत्कटाक्षः सकृत्पातितश्चे-
-द्भवेत्ते दयाशील का नाम हानिः ॥ १५ ॥
விஶாலேஷு கர்ணாந்ததீ₃ர்கே₄ஷ்வஜஸ்ரம்
த₃யாஸ்யந்தி₃ஷு த்₃வாத₃ஶஸ்வீக்ஷணேஷு ।
மயீஷத்கடாக்ஷ: ஸக்ருத்பாதிதஶ்சே-
-த்₃ப₄வேத்தே த₃யாஶீல கா நாம ஹானி: ॥ 15 ॥
viśālēṣu karṇāntadīrghēṣvajasraṃ
dayāsyandiṣu dvādaśasvīkṣaṇēṣu ।
mayīṣatkaṭākṣaḥ sakr̥tpātitaścē-
-dbhavēttē dayāśīla kā nāma hāniḥ ॥ 15 ॥
The wide long Eyes extending till the Ears,
from which continually pours forth Compassion;
Those Twelve Eyes, if just once cast their Glance upon me
What Loss indeed will there be to You, O my Compassionate Lord?
விரிவாகிச் செவியூடும் வரிவேலுன் கண்கள்
அரிதான அமுதூறி அடங்காது பொங்கும்
பெரிதான இருவாறு ஒருபோது என்பால்
பரிவாகின் எதுவூறு! பகர்வாய் அருளாளா! (15)
அகன்ற பெருவிழிகள் செவிவரை நீண்டிருக்கின்றன;
அவற்றில் அருளமுதம் அடங்காது பொங்கி வழிகின்றது.
அத்தகைய பேரருளான பன்னிரண்டு (இரு ஆறு) கண்களும்
ஒரு கணேமேனும் என்னிடத்தே பதிந்தால், அக்கருணையினால்
தங்களுக்கு என்ன இழப்பு வந்துவிடப் போகிறது,
ஓ அருளாளா! (15)
)सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा
जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।
जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः
किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥ १६ ॥
ஸுதாங்கோ₃த்₃ப₄வோ மே(அ)ஸி ஜீவேதி ஷட்₃தா₄
ஜபன்மந்த்ரமீஶோ முதா₃ ஜிக்₄ரதே யான் ।
ஜக₃த்₃பா₄ரப்₄ருத்₃ப்₄யோ ஜக₃ந்நாத₂ தேப்₄ய:
கிரீடோஜ்ஜ்வலேப்₄யோ நமோ மஸ்தகேப்₄ய: ॥ 16 ॥
sutāṅgōdbhavō mē’si jīvēti ṣaḍdhā
japanmantramīśō mudā jighratē yān ।
jagadbhārabhr̥dbhyō jagannātha tēbhyaḥ
kirīṭōjjvalēbhyō namō mastakēbhyaḥ ॥ 16 ॥
“Son, you are born from my body, May your glory live (forever)”
Thus, over Your Six Heads which Supports the World,
Mahadeva, the Great Lord, joyfully uttered the Truth and blessed You,
O Jagannatha (Lord of the World), You Who Bear the Burden of the World,
I salute those Six Heads which are adorned with glorious diadems! (16)
“என்மேனி யதிலூறும் நின்சோதி வாழும்”
என்றோதி சிவனாருன் சிரமாறில் ஓதும்
கன்றேயிப் புவிதாங்கும் கருணைப்பூ பாலா
மன்றாறு முடியோங்கும் மகுடம்ப ணிந்தேன்! (16)
“எம்முடலில் இருந்து தோன்றிய நினது புகழ் நிலைத்து வாழும்!”
என்று நினது ஆறு தலைகளின் மேல்
சிவபெருமான் அருளோதி வாழ்த்தினார்.
அன்னாரின் கன்றாகி, இவ்வுலகைத் தாங்கும் கருணைமிகு ஜகந்நாதா,
நினது மகுடம் புனைந்த ஆறுதலைகளையும் யான் பணிந்தேன்! (16)
स्फुरद्रत्नकेयूरहाराभिराम-
-श्चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः ।
कटौ पीतवासाः करे चारुशक्तिः
पुरस्तान्ममास्तां पुरारेस्तनूजः ॥ १७ ॥
ஸ்பு₂ரத்₃ரத்னகேயூரஹாராபி₄ராம-
-ஶ்சலத்குண்ட₃லஶ்ரீலஸத்₃க₃ண்ட₃பா₄க₃: ।
கடௌ பீதவாஸா: கரே சாருஶக்தி:
புரஸ்தான்மமாஸ்தாம் புராரேஸ்தனூஜ: ॥ 17 ॥
sphuradratnakēyūrahārābhirāma-
-ścalatkuṇḍalaśrīlasadgaṇḍabhāgaḥ ।
kaṭau pītavāsāḥ karē cāruśaktiḥ
purastānmamāstāṃ purārēstanūjaḥ ॥ 17 ॥
With an enchaining Form adorned with Bracelets
and Garlands studded with Glittering Gems,
Charming Ear-Rings moving to and fro over the Shining Face,
With Golden Yellow Clothes over the Waist, holding the beautiful Shakti Vel,
I See Your delightful Form before my eyes,
O the Son of the Enemy of Tripurasura!
கங்கண மாலைகள் எங்கும் கதிர்மணி ஆரமும் மின்னும்
தொங்கிடும் காதினில் அங்கும் இங்கினும் ஆடிடும் வண்ணம்
அங்கிடை யாடையில் தங்கம் அருவுமை வேற்கரம் கொண்டும்
சங்கரன் மூவரன் சிங்கம் எங்கணு ளேவரக் கண்டேன்! (17)
அழகிய கங்கணமும், ஒளிரும் கற்கள் பதித்த மணி மாலைகள் அணிந்தும்,
அசைகின்ற அழகிய காதணிகளைச் செவிகளில் அணிந்தும்,
பொன்னென ஒளிரும் மஞ்சள் பட்டுத் துணியை இடையில் கட்டியும்,
கையில் சக்தியின் வேலை ஏந்தியும் எழுந்தருளும் ,
ஓ திரிபுராசுரனின் எதிரியான சிவபெருமானின் செல்வனே,
நின்னை என் (மனக்)கண்களில் காணுகின்றேன்! (17)
इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या-
-ह्वयत्यादराच्छङ्करे मातुरङ्कात् ।
समुत्पत्य तातं श्रयन्तं कुमारं
हराश्लिष्टगात्रं भजे बालमूर्तिम् ॥ १८ ॥
இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான்ப்ரஸார்யா-
-ஹ்வயத்யாத₃ராச்ச₂ங்கரே மாதுரங்காத் ।
ஸமுத்பத்ய தாதம் ஶ்ரயந்தம் குமாரம்
ஹராஶ்லிஷ்டகா₃த்ரம் ப₄ஜே பா₃லமூர்திம் ॥ 18 ॥
ihāyāhi vatsēti hastānprasāryā-
-hvayatyādarācchaṅkarē māturaṅkāt ।
samutpatya tātaṃ śrayantaṃ kumāraṃ
harāśliṣṭagātraṃ bhajē bālamūrtim ॥ 18 ॥
“Come here, my Son”, by extending the arms;
When Shankara calls You, from Your Mother’s lap You
Spring up towards the endearing Embrace of Your Father, O Kumara,
Worship that Form of Bala Kumara
Whose Body was Embraced by Hara! (18)
“வாராயோ இங்கு” என வல்ல சிவன் கைநீட்ட
வீராநீ தாய்ம டியை விட்டெ ழும்பிப் போனாயே!
வேரா னார் தழுவு சுக விளைவே இளங்குமரா
பாராய்ப் பரம னணைப் பால னுனைப் பணிவேனே! (18)
“இங்கே வருவாய்” எனத் தனது கரங்களை நீட்டிப்
பரசிவனார் உன்னை அழைத்தவுடன், உனது தாயாரின் மடியிலிருந்து,
நினது தந்தையின் அரவணைப்புக்காகத் தாவிச் சென்றாயே ஓ இளங்குமரா, பரமனால் தழுவப்பட்ட அந்த பாலகுமாரனின் வடிவை
யான் பணிகின்றேன்! (18)

कुमारेशसूनो गुह स्कन्द सेना-
-पते शक्तिपाणे मयूराधिरूढ ।
पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्
प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥ १९ ॥
குமாரேஶஸூனோ கு₃ஹ ஸ்கந்த₃ ஸேனா-
-பதே ஶக்திபாணே மயூராதி₄ரூட₄ ।
புலிந்தா₃த்மஜாகாந்த ப₄க்தார்திஹாரின்
ப்ரபோ₄ தாரகாரே ஸதா₃ ரக்ஷ மாம் த்வம் ॥ 19 ॥
kumārēśasūnō guha skanda sēnā-
-patē śaktipāṇē mayūrādhirūḍha ।
pulindātmajākānta bhaktārtihārin
prabhō tārakārē sadā rakṣa māṃ tvam ॥ 19 ॥
O Kumara, Son of the Lord (Shiva), O Guha and Skanda,
O the Commander of the Army of Devas,
Holding Shakti-Vel in Your Hands, Mounted on the Peacock,.
You are the darling of the daughter of the hunter of Pulinda tribe
O Lord, You Who are the Enemy of Tarakasura,
Please Protect me always! (19)
குமரனே சிவனருட் பாலா குஹ்யனே கந்தசெவ் வேளே
அமரதி பதியுமை வேலா அருள்மயி லமர்ந்திடும் சீலா
தமர்புலிந் தவரின வேடர் தனயளின் மனவனு கூலா
சமரிடுந் தாரகன் காலா! சரணிடும் எனக்கருள் வாயே! (19)
ஓ குமரா, சிவனின் மகனே, குஹனே, கந்தா, அமரர் படை வேந்தே
சக்தி வேலைக் கரம் கொண்டவராய், மயிலில் அமர்ந்தருளிப்
புலிந்தர் இன வேடரின் மகளின் (ஸ்ரீ வள்ளியின்) மனதைக் கவர்ந்தவரே,
ஓ இறைவா, தாருகாசுரனை எதிர்த்தவரே,
பணியும் என்னைக் காத்தருள்வீரே! (19)
प्रशान्तेन्द्रिये नष्टसञ्ज्ञे विचेष्टे
कफोद्गारिवक्त्रे भयोत्कम्पिगात्रे ।
प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं
द्रुतं मे दयालो भवाग्रे गुह त्वम् ॥ २० ॥
ப்ரஶாந்தேந்த்₃ரியே நஷ்டஸஞ்ஜ்ஞே விசேஷ்டே
கபோ₂த்₃கா₃ரிவக்த்ரே ப₄யோத்கம்பிகா₃த்ரே ।
ப்ரயாணோன்முகே₂ மய்யநாதே₂ ததா₃னீம்
த்₃ருதம் மே த₃யாலோ ப₄வாக்₃ரே கு₃ஹ த்வம் ॥ 20 ॥
praśāntēndriyē naṣṭasañjñē vicēṣṭē
kaphōdgārivaktrē bhayōtkampigātrē ।
prayāṇōnmukhē mayyanāthē tadānīṃ
drutaṃ mē dayālō bhavāgrē guha tvam ॥ 20 ॥
In old age, when my senses fade,
when I lose Consciousness and lie as if dead
when my face oozes phlegm and my body trembles in dread
As I lie awaiting the Death, O my Lord, for me, this helpless creature,
May You come quickly and be before me,
O Guha, the Compassionate Lord! (20)
முதிர்வுறப் புலனொளி தளரும்் முழுவுணர் வறிவது விலகும்
பதிர்வுடற் சடம்நடுங்் கிடவும் பலவுமிழ்ச் சீழ்முகம் ஒழுகும்
கதியற இறந்திட விழுந்து கவலையில் உழல்வுறும் பொழுது
நிதியருள் தரவிரைந் தெதிரில் நிதமருள் குஹமுரு கேசா! (20)
முதுமையினால் புலனறவு தளர,
உணர்வினை இழந்து அசைவற்ற சடமாக படுத்திருக்கும் போது,
சீழ் ஒழுகும் முகத்தினனாக, உடல் நடுங்க,
மரணத்தை எதிர்பார்த்து யான் வீழ்ந்து கிடக்கும்போது, ஓ இறைவா,
உதவுவாரின்றி உழலும் எனக்காக விரைந்து என் முன் வந்து,
நினது அருளுருவைத் தருவாயாக, ஓ கருணைசீர் குஹமுருகேசா (20)
कृतान्तस्य दूतेषु चण्डेषु कोपा-
-द्दहच्छिन्द्धि भिन्द्धीति मां तर्जयत्सु ।
मयूरं समारुह्य मा भैरिति त्वं
पुरः शक्तिपाणिर्ममायाहि शीघ्रम् ॥ २१ ॥
க்ருதாந்தஸ்ய தூ₃தேஷு சண்டே₃ஷு கோபா-
-த்₃த₃ஹச்சி₂ந்த்₃தி₄ பி₄ந்த்₃தீ₄தி மாம் தர்ஜயத்ஸு ।
மயூரம் ஸமாருஹ்ய மா பை₄ரிதி த்வம்
புர: ஶக்திபாணிர்மமாயாஹி ஶீக்₄ரம் ॥ 21 ॥
kr̥tāntasya dūtēṣu caṇḍēṣu kōpā-
-ddahacchinddhi bhinddhīti māṃ tarjayatsu ।
mayūraṃ samāruhya mā bhairiti tvaṃ
puraḥ śaktipāṇirmamāyāhi śīghram ॥ 21 ॥
When the fierce Messengers of Death come and yell with ferocity,
“Burn him, Cut him, Split him” thus threatening me,
May You, mounted on Peacock come and assure by saying “Fear Not!”
May You, holing the Shakti Vel in Hand, come quickly, O Lord!
காலனின் தூதுவர் கொட்டுங் கனல்முகக் கோபமு மிட்டு
“மேலறு! தீயிடு! வெட்டு்!” மிரட்டுமப் பேரொலி யிட்டுச்
சூலறுப் பாரதன் முன்னம் சுகமுற “பயமறு” என்னும்
வேலவ ராயுடன் வருக! வேள்மயில் மேலருள் தருக! (21)
அச்சுறுத்தும் வடிவினராக எமதூதர்கள் என்னெதிர் வந்து,
பெரும் சினத்துடன் “இவனை எரியுங்கள், வெட்டுங்கள், அறுங்கள்” எனப் பேரொலி எழுப்பி மிரட்டும்போது, மயில் வாஹனனாக “அஞ்சற்க” எனும் ஆறுதலை எனக்கு அளிப்பதற்கு, ஓ இறைவா,
சக்திவேலைக் கையில் ஏந்தியவராகத் தாங்கள் உடனே வரவேண்டும்! (21)
प्रणम्यासकृत्पादयोस्ते पतित्वा
प्रसाद्य प्रभो प्रार्थयेऽनेकवारम् ।
न वक्तुं क्षमोऽहं तदानीं कृपाब्धे
न कार्यान्तकाले मनागप्युपेक्षा ॥ २२ ॥
ப்ரணம்யாஸக்ருத்பாத₃யோஸ்தே பதித்வா
ப்ரஸாத்₃ய ப்ரபோ₄ ப்ரார்த₂யே(அ)னேகவாரம் ।
ந வக்தும் க்ஷமோ(அ)ஹம் ததா₃னீம் க்ருபாப்₃தே₄
ந கார்யாந்தகாலே மநாக₃ப்யுபேக்ஷா ॥ 22 ॥
praṇamyāsakr̥tpādayōstē patitvā
prasādya prabhō prārthayē’nēkavāram ।
na vaktuṃ kṣamō’haṃ tadānīṃ kr̥pābdhē
na kāryāntakālē manāgapyupēkṣā ॥ 22 ॥
I Salute You by falling at Thine Feet right now,
Be Merciful, O Lord, I am offering my prayers to You for many times now
As I will not have the power to speak at that time (of my old age and near death)
O the Ocean of Compassion, even for a moment,
Please do not forsake me during the fragile end of my life! (22)
காலடி வீழ்ந்திப் போதுன் கருணையை ஏந்திப் போதும்
மேலுமெப் போதும் ஓதும் மெய்யடி யாரெனும் போதும்
தோலுர மில்லாப் போதில் துணையுனைச் சொல்லாப் போதில்
காலடி தந்தெப் போதும் கைவிடா திருவருட் கடலே! (22)
தங்கள் திருவடிகளில் இப்போதே விழுந்து வணங்குகிறேன்.
கருணை அளியுங்கள், ஓ தலைவா! பலமுறைத் தங்களை யான் இப்போது பணிகின்றேன். ஏனென்றால், (முதுமையும், மரணத்தை நெருங்குகின்றதுமான) அச்சமயத்தில், தங்களிடம் விண்ணப்பிக்க எனக்கு வலிமை இருக்காது. அதனால், கருணைக்கடலே, எனது தளர்வுக் காலத்தில் ஒரு கணமேனும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்! (22)
सहस्राण्डभोक्ता त्वया शूरनामा
हतस्तारकः सिंहवक्त्रश्च दैत्यः ।
ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं
न हंसि प्रभो किं करोमि क्व यामि ॥ २३ ॥
ஸஹஸ்ராண்ட₃போ₄க்தா த்வயா ஶூரநாமா
ஹதஸ்தாரக: ஸிம்ஹவக்த்ரஶ்ச தை₃த்ய: ।
மமாந்தர்ஹ்ருதி₃ஸ்த₂ம் மன:க்லேஶமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ₄ கிம் கரோமி க்வ யாமி ॥ 23 ॥
sahasrāṇḍabhōktā tvayā śūranāmā
hatastārakaḥ siṃhavaktraśca daityaḥ ।
mamāntarhr̥disthaṃ manaḥklēśamēkaṃ
na haṃsi prabhō kiṃ karōmi kva yāmi ॥ 23 ॥
The demon named as Surapadma, the enjoyer of Thousand Universes
Was slain by You, along with the demons Taraka and Singhamukha,
Within the core of my Heart is the (demonic) Affliction,
You have still not slain that!
What shall I do now? Where shall I go now, O Lord! (23)
ஆயிரம் உலகாள் சூரன் அரிமுகன் தாரகன் என்று
தீயிடர் புரிவார் கொன்று திருத்தினை ஏனோ இன்றும்
நோயிடர் மனமாய் என்னுள் நூற்றிடும் இருளைக் கொல்லாய்!
வாயிலன் செய்வது என்ன? வழிஎன்ன சொல்லிடு முருகா! (23)
ஆயிரம் உலகங்களை அனுபவித்த சூரபத்மன்
மற்றும் தாரகன், சிங்கமுகன் போன்ற கொடிய அரக்கர்களைஅழித்தீர்கள். என்னுள் இருக்கின்ற மனத்துயரமாகிய அரக்கனைத்
தாங்கள் இன்னமும் அழிக்காதது ஏன்?
(வாயும் வழியுமற்ற) நான் இப்பொழுது
என்ன செய்வது, எங்கு செல்வது, ஓ இறைவா (முருகா)! (23)
अहं सर्वदा दुःखभारावसन्नो
भवान् दीनबन्धुस्त्वदन्यं न याचे ।
भवद्भक्तिरोधं सदा क्लप्तबाधं
ममाधिं द्रुतं नाशयोमासुत त्वम् ॥ २४ ॥
அஹம் ஸர்வதா₃ து₃:க₂பா₄ராவஸன்னோ
ப₄வான் தீ₃னப₃ந்து₄ஸ்த்வத₃ன்யம் ந யாசே ।
ப₄வத்₃ப₄க்திரோத₄ம் ஸதா₃ க்லப்தபா₃த₄ம்
மமாதி₄ம் த்₃ருதம் நாஶயோமாஸுத த்வம் ॥ 24 ॥
ahaṃ sarvadā duḥkhabhārāvasannō
bhavān dīnabandhustvadanyaṃ na yācē ।
bhavadbhaktirōdhaṃ sadā klaptabādhaṃ
mamādhiṃ drutaṃ nāśayōmāsuta tvam ॥ 24 ॥
Forever, I am drowned in the burden of Sorrows,
I pray to None but You, the Saviour of the down-trodden in all the Worlds!
The impediments that obstruct my absolute devotion to You – are my afflictions; O the Son of Uma, please cut asunder those afflictions at once! (24)
முற்றிடர் துயரப் பாரம் மூழ்கினேன் நினையன் றாரே
அற்றவர் துணையென் றாகும் அவனியில் நினையத னாலே
பற்றினேன்் பழுதென் துன்பப் பளுவினால் தொழுதல் குன்றும்
குற்றமேன்்? உமையின் அன்புக் குமரனே குறையறுப் பீரே! (24)
எப்பொழுதும் துயரத்தின் பளுவினால் நான் துவண்டு கிடக்கிறேன்.
எவ்வுலகிலும் துயரப்படுபவர்களின் துணைவனாக இருக்கின்ற
தங்களைத் தவிர, வேறு எவரையும் யான் தொழுவதில்லை!
எனினும் தங்களை முழுமையாகத் தொழமுடியாமல் யான் இருப்பதற்குக் காரணம் எனது துயரங்களே. எனவே அவற்றை இக்கணமே அழியுங்கள்!
ஓ உமையின் செல்வனே! (24)
अपस्मारकुष्ठक्षयार्शः प्रमेह-
-ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं
विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥ २५ ॥
அபஸ்மாரகுஷ்ட₂க்ஷயார்ஶ: ப்ரமேஹ-
-ஜ்வரோன்மாத₃கு₃ல்மாதி₃ரோகா₃ மஹாந்த: ।
பிஶாசாஶ்ச ஸர்வே ப₄வத்பத்ரபூ₄திம்
விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்₃ரவந்தே ॥ 25 ॥
apasmārakuṣṭhakṣayārśaḥ pramēha-
-jvarōnmādagulmādirōgā mahāntaḥ ।
piśācāśca sarvē bhavatpatrabhūtiṃ
vilōkya kṣaṇāttārakārē dravantē ॥ 25 ॥
Epilepsy, Leprosy, Tuberculosis, Piles, Urinary diseases, Fever,
Insanity, Enlargement of Spleen or other abdominal glands and
Other formidable Diseases, as also all types of Evil Spirits,
(when) in Your sacred ash contained in a Leaf, sees You,
as the Enemy of the formidable Taraka,
they hasten to run away at once! (25)
வாதம்் தொழுநோய்க் காசம் வலிசிறு நீரகம் மூலம்
சேதம் குடல்நோய்ப் பித்தம் செய்வினை போலவை யாவும்
நாதன் திருநீ றிலையை நமனெனத் தாரக னரியும்
பூதன் குருகுஹ னாகப் புரிந்தவை மறைந்துடன் ஓடும்! (25)
வாதம், குட்டம், காசம், மூலம், சிறுநீரகக் குறை, காய்ச்சல்,
பித்தம், குடல்நோய் மற்றைய பெருநோய்கள், அத்துடன் எல்லாவகையான தீயசக்திகளின் செய்வினைகள் எல்லாமும்,
தங்களின் திருநீறு கொண்ட இலையினைக் கண்ட பொழுதில்,
அதில் தாரகன் முதலான கொடிய அரக்கர்களை அழித்த
பெரும் வலிமையினை கொண்ட தங்களைக் கண்டதாக அஞ்சி
உடனே ஓடி மறைந்து விடுகின்றன! (25)
दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति-
-र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥ २६ ॥
த்₃ருஶி ஸ்கந்த₃மூர்தி: ஶ்ருதௌ ஸ்கந்த₃கீர்தி-
-ர்முகே₂ மே பவித்ரம் ஸதா₃ தச்சரித்ரம் ।
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்₄ருத்யம்
கு₃ஹே ஸந்து லீனா மமாஶேஷபா₄வா: ॥ 26 ॥
dr̥śi skandamūrtiḥ śrutau skandakīrti-
-rmukhē mē pavitraṃ sadā taccaritram ।
karē tasya kr̥tyaṃ vapustasya bhr̥tyaṃ
guhē santu līnā mamāśēṣabhāvāḥ ॥ 26 ॥
Forever (my eyes) seeing the divine form of Skanda
(the ears) hearing His Glories and
My mouth always eulogizing those virtuous deeds
With my hands forever engaged in Your service,
May my embodiment be Your Servant forever,
May all my feelings be completely engrossed in You, O Guha! (26)
என்றும்விழி கந்தனுருக் காண என்றும்செவி கந்தனியல் கேள
என்றுமிதழ் கந்தனிசை பாட என்றும்கரம் கந்தன்செய லூட
என்றுமுடல் கந்தனடி யாக எந்தன்புலன் சிந்தனையு மாக
என்றுமுனை எந்தனுயி ராக எண்ணுமருள் தந்தகுஹ நேயா (26)
எனது கண்கள் எப்பொழுதும் கந்தப்பெருமானின் திருவடிவை தரிசனம் செய்துகொண்டும், எனது செவிகள் அன்னாரின் புகழை கேட்டுக் கொண்டும், எனது வாய் அவரது பேராற்றலைப் பாடிக் கொண்டும், எனது கரங்கள் அவருக்கான சேவையை எப்பொழுது செய்து கொண்டும்,
எனது உடல் என்றென்றும் அவரது பணியாளாக இருக்கட்டும்!
எனது புலனறிவும், ஓ குஹா, நினது வடிவிலேயே திளைக்கட்டும்! (26)
मुनीनामुताहो नृणां भक्तिभाजा-
-मभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।
नृणामन्त्यजानामपि स्वार्थदाने
गुहाद्देवमन्यं न जाने न जाने ॥ २७ ॥
முனீநாமுதாஹோ ந்ருணாம் ப₄க்திபா₄ஜா-
-மபீ₄ஷ்டப்ரதா₃: ஸந்தி ஸர்வத்ர தே₃வா: ।
ந்ருணாமந்த்யஜாநாமபி ஸ்வார்த₂தா₃னே
கு₃ஹாத்₃தே₃வமன்யம் ந ஜானே ந ஜானே ॥ 27 ॥
munīnāmutāhō nr̥ṇāṃ bhaktibhājā-
-mabhīṣṭapradāḥ santi sarvatra dēvāḥ ।
nr̥ṇāmantyajānāmapi svārthadānē
guhāddēvamanyaṃ na jānē na jānē ॥ 27 ॥
Is it not for the worship by the great sages and ascetics only,
there are gods everywhere granting the desired boons!
But to bestow grace for the sake of Devotees
who are down-trodden and deemed non-meritorious by birth,
Apart from Guha, (Who is there)
I do not know, I do not know! (27)
அடியவர்க் கருளும் தெய்வம் ஆனவை பலவும் செம்மைக்
குடியினர் தவமுனி செய்யும் கும்பிடும் பலனுக் கன்்றோ!
வடிவிலர் பிறவித் தொய்வில்் வகையிலர்க் கருளும் தெய்வம்
முடிவிலர் குஹன் பிறர்யாரே முடிவருள் பவரறி யேனே! (27)
பெரும் ஞானிகளும் முனிவர்களும் வணங்குவதை ஏற்றுக் கொண்டே
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வரங்களைத் தருவதாக
எங்கும் பல தெய்வங்கள் இருக்கன்றன!
ஆனால் உயர்வற்ற நிலையில் பிறந்தவராக் கருதப்படுபவர்களுக்கும் அருள்செய்து ஆதரிக்க, ஓ குஹா, உன்னையன்றி
வேறு எவர் அறியேன்! வேறு எவர் அறியேன்! (27)
कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा
नरो वाथ नारी गृहे ये मदीयाः ।
यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं
स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥ २८ ॥
கலத்ரம் ஸுதா ப₃ந்து₄வர்க₃: பஶுர்வா
நரோ வாத₂ நாரீ க்₃ருஹே யே மதீ₃யா: ।
யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ ப₄வந்தம்
ஸ்மரந்தஶ்ச தே ஸந்து ஸர்வே குமார ॥ 28 ॥
kalatraṃ sutā bandhuvargaḥ paśurvā
narō vātha nārī gr̥hē yē madīyāḥ ।
yajantō namantaḥ stuvantō bhavantaṃ
smarantaśca tē santu sarvē kumāra ॥ 28 ॥
Spouse, children, all friends and relatives as well as
Other men and women who all reside in my home
May all adore and pay obeisance to You alone,
May all praise You and surrender to You alone,
May all abide in Thine contemplation only, O Kumara! (28)
உறவினர் துணைமக வோடும் உடனிரு நண்பர்க ளோடும்
பிறயிரு பாலரென் வீடுள் பிணைந்துற வாகிய ரோடும்
சிறந்துனை யேபணி வோமே சிரத்தை யிலேதொழு வோமே
திறனிசை பாடியுட் தோயும் திருவடி வேகும ரேசா! (28)
வாழ்கைக் துணைவர், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்,
மற்றும் உடன் வீட்டில் வசிக்கும் ஆண், பெண் அனைவரும்
நின்னையே போற்றட்டும்! நின்னையே தொழட்டும்!
நினது புகழையே பாடட்டும்! நின்னையே சரணடையட்டும்!
அனைவரும் நினது தியானத்திலேயே நிலைத்திருக்கட்டும், ஓ குமரா! (28)
मृगाः पक्षिणो दंशका ये च दुष्टा-
-स्तथा व्याधयो बाधका ये मदङ्गे ।
भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे
विनश्यन्तु ते चूर्णितक्रौञ्चशैल ॥ २९ ॥
ம்ருகா₃: பக்ஷிணோ த₃ம்ஶகா யே ச து₃ஷ்டா-
-ஸ்ததா₂ வ்யாத₄யோ பா₃த₄கா யே மத₃ங்கே₃ ।
ப₄வச்ச₂க்திதீக்ஷ்ணாக்₃ரபி₄ன்னா: ஸுதூ₃ரே
வினஶ்யந்து தே சூர்ணிதக்ரௌஞ்சஶைல ॥ 29 ॥
mr̥gāḥ pakṣiṇō daṃśakā yē ca duṣṭā-
-stathā vyādhayō bādhakā yē madaṅgē ।
bhavacchaktitīkṣṇāgrabhinnāḥ sudūrē
vinaśyantu tē cūrṇitakrauñcaśaila ॥ 29 ॥
Those Animals, Birds and Biting Insects which are offensive,
and just as, those diseases which cause distress and afflict my body,
with Your sharp Shakti Vel, May You, by piercing and casting those far away,
Kindly annihilate those dangers,
O Lord Who Crushed the Krauncha Mountain. (29)
துட்டவி லங்கினம் பறவை துயரிடும் பூச்சிகள் பிறவும்
கெட்டவு பாதைகள் உடலிற் கெடுசெய்் தீவினை யவையும்
வெட்டிய ழித்திடும் சக்தி வேலத னாலரிந் தெறிவாய்
கட்டறக் கிரவுஞ்சங் கடைந்த கந்தா கதிர்வே லவனே! (29)
கெடுதி விளைக்கும் துட்ட விலங்குகள், பறவைகள், விடப் பூச்சிகள் முதலானவறையும், அது போல உடலை வருத்துகின்ற கொடு நோய்கள் முதலான தீவினைகள் முதலானவற்றையும், நினது கூரிய சக்தி வேலினால் வெட்டி அழித்துத் தொலைவுற எறிந்து விடுவாய், ஓ கிரவுஞ்ச மலையை வேலால் கடைந்தழித்த ( கந்தப்) பெருமானே! (29)
जनित्री पिता च स्वपुत्रापराधं
सहेते न किं देवसेनाधिनाथ ।
अहं चातिबालो भवान् लोकतातः
क्षमस्वापराधं समस्तं महेश ॥ ३० ॥
ஜனித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராத₄ம்
ஸஹேதே ந கிம் தே₃வஸேனாதி₄நாத₂ ।
அஹம் சாதிபா₃லோ ப₄வான் லோகதாத:
க்ஷமஸ்வாபராத₄ம் ஸமஸ்தம் மஹேஶ ॥ 30 ॥
janitrī pitā ca svaputrāparādhaṃ
sahētē na kiṃ dēvasēnādhinātha ।
ahaṃ cātibālō bhavān lōkatātaḥ
kṣamasvāparādhaṃ samastaṃ mahēśa ॥ 30 ॥
Mother and Father, seeing the mistakes of their children
Don’t they tolerate and forgive those, O the Chief of the Army of Devas!
Mere child I am, and You are the Father of the World,
O the Great Lord, May You pardon my faults (and bestow grace!) (30)
பிள்ளைகள் பிழைய றுத்துப் பெற்றவர் ஏற்றுக் கொள்ளல்
உள்ளதிவ் வுலகில் உண்டு! ஒறுப்பதோ? பிழைசெய் யானும்
எள்ளிட எளியன் பிள்ளை! எந்தைநீ உலகின் தந்தை!
தள்ளுயென் பிழை மறுத்துத் தந்தருள் தேவ தேவே! (30)
அன்னையும் தந்தையும் தம் பிள்ளைகளின் தவற்றினைக் கண்டும்,
அவற்றைப் பொறுத்து மன்னிப்பர் அன்றோ!
எளியனாகிய யான் தனயன், நீவீர் உலகம் யாதிற்கும் தந்தை!
(அதனால்) என் தவறுகளை மன்னித்து ஓ பேரிறிவா,
எனக்கு அருள் செய்யுங்கள்! (30)
नमः केकिने शक्तये चापि तुभ्यं
नमश्छाग तुभ्यं नमः कुक्कुटाय ।
नमः सिन्धवे सिन्धुदेशाय तुभ्यं
पुनः स्कन्दमूर्ते नमस्ते नमोऽस्तु ॥ ३१ ॥
நம: கேகினே ஶக்தயே சாபி துப்₄யம்
நமஶ்சா₂க₃ துப்₄யம் நம: குக்குடாய ।
நம: ஸிந்த₄வே ஸிந்து₄தே₃ஶாய துப்₄யம்
புன: ஸ்கந்த₃மூர்தே நமஸ்தே நமோ(அ)ஸ்து ॥ 31 ॥
namaḥ kēkinē śaktayē cāpi tubhyaṃ
namaśchāga tubhyaṃ namaḥ kukkuṭāya ।
namaḥ sindhavē sindhudēśāya tubhyaṃ
punaḥ skandamūrtē namastē namō’stu ॥ 31 ॥
Salutations to Your Peacock and Your Shakti Vel,
Salutations to Your Goat, Salutations to Your Rooster
Salutations to Your divine abode by the side of the Sea,
Salutations, Salutations to You again and again,
O Skanda, Salutations to Your enchanting Form! (31)
வாழியுன் மயிலும் வாழி வல்லருள் வேலும் வாழி
வாழியுன் புருவை வாழி வரி்கொடிச் சேவல் வாழி
வாழியுன் நலமும் ஆழி வளர்கரைக் கோவில் வாழி
வாழியுன் னருளும் வாழி வடிவெழிற் கந்த வேளே! (31)
நினது மயிலை, நினது சக்தி வேலினை,
நினது ஆடு எனும் புருவையை, நினது (அழகிய கொடியில் விளங்கும்) சேவலை, கடலின் கரையில் நலம் விளைக்க எழுந்தருளியுள்ள நினது ஆலயத்தை, (வாழி என) வாழ்த்தி வணங்குகிறேன்!
மீண்டும் மீண்டும் நினது அருளை, எழில் வடிவை வாழ்த்தி வணங்குகிறேன்,
ஓ கந்தப்பெருமானே! (31)
जयानन्दभूमं जयापारधामं
जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।
जयानन्दसिन्धो जयाशेषबन्धो
जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥ ३२ ॥
ஜயானந்த₃பூ₄மம் ஜயாபாரதா₄மம்
ஜயாமோக₄கீர்தே ஜயானந்த₃மூர்தே ।
ஜயானந்த₃ஸிந்தோ₄ ஜயாஶேஷப₃ந்தோ₄
ஜய த்வம் ஸதா₃ முக்திதா₃னேஶஸூனோ ॥ 32 ॥
jayānandabhūmaṃ jayāpāradhāmaṃ
jayāmōghakīrtē jayānandamūrtē ।
jayānandasindhō jayāśēṣabandhō
jaya tvaṃ sadā muktidānēśasūnō ॥ 32 ॥
Victory to You, the Inner space of Bliss Consciousness,
Victory to You Whose Abode is in that boundless Bliss Consciousness,
Victory to You Whose Glory transcend everywhere,
Victory to You Who is the Embodiment of Bliss,
Victory to You Who is the Ocean of Bliss,
Victory to You Whose kinship is infinite
Victory to You Always, the Son of the Lord Who bestows Liberation ! (32)
சின்மய வெளிநீ வாழி சித்சுகப் புகல்நீ வாழி
தன்மயத் திசைநீ வாழி சத்சுக வுருநீ வாழி
முன்னருட் கடல்நீ வாழி முடிவிலா உறவே வாழி!
நன்முடி வருளும் ஈசன் நற்கும ரேசா வாழி! (32)
முருகா! சிதானந்த வெளியான உனக்கு வெற்றி!
முடிவற்ற பரமானந்தப் பீடமுடைய உனக்கு வெற்றி !
எங்கும் பரந்த புகழருள் கொண்ட உனக்கு வெற்ற்!
தூய ஆனந்த வடிவான உனக்கு வெற்றி!
சச்சிதானந்தக் கடலான உனக்கு வெற்றி!
அழியாத, முடியாத அன்பு உறவே உனக்கு வெற்றி
முக்தி அளிக்கும் பரசிவனின் செல்வனே, உனக்கு என்றும் வெற்றி! (32)
भुजङ्गाख्यवृत्तेन क्लप्तं स्तवं यः
पठेद्भक्तियुक्तो गुहं सम्प्रणम्य ।
स पुत्रान्कलत्रं धनं दीर्घमायु-
-र्लभेत्स्कन्दसायुज्यमन्ते नरः सः ॥ ३३ ॥
பு₄ஜங்கா₃க்₂யவ்ருத்தேன க்லப்தம் ஸ்தவம் ய:
படே₂த்₃ப₄க்தியுக்தோ கு₃ஹம் ஸம்ப்ரணம்ய ।
ஸ புத்ரான்கலத்ரம் த₄னம் தீ₃ர்க₄மாயு-
-ர்லபே₄த்ஸ்கந்த₃ஸாயுஜ்யமந்தே நர: ஸ: ॥ 33 ॥
bhujaṅgākhyavr̥ttēna klaptaṃ stavaṃ yaḥ
paṭhēdbhaktiyuktō guhaṃ sampraṇamya ।
sa putrānkalatraṃ dhanaṃ dīrghamāyu-
-rlabhētskandasāyujyamantē naraḥ saḥ ॥ 33 ॥
This Hymn is arranged and set in the Bhujanga Metre,
Whoever recites this with steadfast devotion and
offer reverentially obeisance to Lord Guha, shall be bestowed
with good spouse, children, wealth and long Life, eventually obtaining
Sayujya (i.e. absorbed into the divinity) of Skanda! (33)
அரவென நெளியும் சந்த அமைப்பினிற் பதியும் இந்தக்
குருகுஹன் துதியைச் சிந்தை குவியுறப் பதியத் தந்தார்
வரமென மனைநல் மக்கள் வளமொடு பெருகும் ஆயுள்
தரமடைந் துயர்வார் கந்தன் தயையருள் கலந்த பேறே! (32)
அரவத்தின் நடைபோன்ற சந்தத்தில் அமைந்த இந்தப் பாடல்களை
எவர் நழுவாத பக்தியுடன் (சிந்தை ஒன்றிப் பணிவுடன்) பாடுகிறாரோ
அவர் நல்ல மனைத்துணை, நன்மக்கள், நற்செல்வம், நீண்ட ஆயுள் என (உலகில் எல்லா நலமும் பெற்று வாழ்ந்து) முடிவில் கந்தப்பெருமானின் திருவருளினுள் கலந்துவிடும் “ஸாயுஜ்யம்” எனும் நற்பேறு அடைகிறார். (33)
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य
श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य
श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीसुब्रह्मण्यभुजङ्गम् ॥
இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய
ஶ்ரீ கோ₃விந்த₃ப₄க₃வத்பூஜ்யபாத₃ஶிஷ்யஸ்ய
ஶ்ரீமச்ச₂ங்கரப₄க₃வத: க்ருதௌ ஶ்ரீஸுப்₃ரஹ்மண்யபு₄ஜங்க₃ம் ॥
iti śrīmatparamahaṃsaparivrājakācāryasya
śrīgōvindabhagavatpūjyapādaśiṣyasya
śrīmad Shaṅkarabhagavataḥ kr̥tau śrīsubrahmaṇyabhujaṅgam ॥

Related Posts

Share this Post