Sri Mukambika Stotram
Sri Mukambika Stotram – Inspired translation – in Tamil and English
Sri Mukambika Stotram – Inspired translation – in Tamil and English
Sri Mukapancasati Saram – 31 Selected Verses on Kanchi Sri Kamakhi – in Tamil and English
பகவான் ஆதி சங்கரர் அருளிய பவானி அஷ்டகம் எனும் இந்த அழகிய எட்டு ஸ்லோகங்கள், காசியில் அன்னை பவானியை வேண்டிப் பாடியதாக வரலாறு. அவ்வரிய இனிய ஸ்லோகங்களின் தமிழாக்கம்.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மறைபொருள் அமிர்தம் (1) ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் – லலிதா என்பது விளையாடுபவள் எனப் பொருள்தருகிறது. ‘லீலா’, ‘லலிதம்’ எனும் சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு விளையாட்டு என்று பொருள். ‘ சஹஸ்ர நாமம்’ என்றால் ஆயிரம் பெயர்கள் எனப்பொருள். அப்படியானால் லலிதா சஹஸ்ரநாமம் என்பதன் மூலம் விளையாடுபவளின் ஆயிரம் பெயர்களைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். எது விளையாட்டு? யார் விளையாடுவது? எதற்கு ஆயிரம் பெயர்கள்? ஏன் இந்த லலிதா சஹஸ்ரநாமம் எனும் மந்திரங்கள் ரஹசியமானதாயும், அதிசயமானதாயும், அம்பிகையாக இறைவனை வழிபாடு செய்வதற்கு ஆதாரமான பாடல்களாகவும் கருதப்படுகின்றன? இங்கே விளையாட்டு என்பது இறைவனின் படைத்தும் வளர்த்தும், அழித்தும்,
இலண்டன் ஈலிங் நகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கனகதுர்க்கை அன்னை வழிபாடு. பனித்திவலை பகலெதிரில் நிலைக்குமோ தீப்பொறியை – பஞ்செதிர் கொள்ளல் எளிதோ எனவாதிட்டு, நம் பிணியை அறுக்கும் அன்னையின் அருளை வேண்டுவோம்.
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய, “பஞ்சதசாக்ஷரி” எனும் மந்திர அக்ஷரங்கள் ஒவ்வொன்றுடனும் தொடங்குகின்ற “மந்த்ரமாத்ருகா ஸ்தவம்” எனும் மந்திராக்ஷர மாலை.
.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மாத்ருகா புஷ்பமாலா (ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி துதிப்பூமாலை) எனும் ஒப்புயர்வற்ற வடமொழியால் வரைந்த நந்நூலை ஓர் நல்முனிவர் நமக்கு அளித்திருக்கிறார். அந்த நந்நூலின் தமிழ்வடிவம். இரண்டாம் பதிப்பு
ஸ்ரீ மீ. ராஜகோபாலன் இயற்றியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருவெம்பாவை என்னும் நூல் திருவானைக்கா சுேத்திரத்தில் கோயிற் கொண்டிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் மஹிமைகளை சப்தப்ராஸம் பொருட்செறிவுடன் கூடிய இருபத்திரண்டு பாடல்கள் ருபமாக வர்ணிக்கிறது – (மஹாபெரியவா ஆசிர்வாதம்)