Adiguru Dhakshinamurthy – Siva Tattvam
சிவ தத்துவ அறிவு விளக்கம் – சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா எனும் ஐந்து சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.
சிவ தத்துவ அறிவு விளக்கம் – சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா எனும் ஐந்து சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.
குருவரம் ஒன்றே தருவது மனிதரின் – புருஷார்த் தமெனும் போதனை நான்கு
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -தத்துவம் நான்மறை தருவது கேட்க
பல கோயில்களுக்கும், மீண்டும் மீண்டும் சென்று, சித்திரங்களை வரைவது கண்டு, நண்பர்கள் ஏன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு வரையக்கூடாது என நல்லெண்ணத்தால் யோசனை கூறினர். கண்களால் மீண்டும் மீண்டும் தரிசித்து, மனதில் தியானத்தால் யூகித்து, மதியால் தீவிர யோசித்து சித்திரங்களை வரையும் வாய்ப்பைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?
முதற்பாடல் மாணவர்களாகிய நமக்கு உரித்தான கடமைகளையும், ஜகத்குருவாகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருவுருவ அழகையும் விளக்குகிறது. அடுத்த 24 பாடல்களும், உயிர்களுக்கு ஆதாரமான தத்துவங்களில் ஞானசுத்தி அடையக்கோரி, ஜகத்குருவிடம் வேண்டுகின்றன.
ஆதி குரு தக்ஷிணாமுர்த்தி வழிபாடு காஞ்சி ஸ்ரீமடம் ஸ்ரீ குரு ஆசியுரை நாள் – 26 – 03 – 98 ஜனன, மரண, துக்கச் சேததக்ஷம் குரும் நமாம: ஞானதாதாவான குருவிற்கு மேம்பட்டவரில்லை என்றே பெரியோர் கூறுவர். எல்லா குருவரர்களுக்கும் குருவான ஸ்ரீபரமேஸ்வரன் தானே விரும்பி எடுத்துக் கொண்ட திருக்கோலம் ஸ்ரீதக்ஷிணமூர்த்தி. முதியவர்களுக்கும் முதியவராக, முன்னவருக்கும் முன்னவராக இருப்பவர் பரமயுவாவாகக் காட்சி தருகிறார். மரங்களில் மூத்ததும், அரசுமான வனஸ்பதியான ஆலமரத்தின் அடியில் ப்ரும்ம ஸ்ருஷ்டியில் முதலில் படைக்கப் பெற்றிருந்தும் வயதால் எல்லோருக்கும் மூத்தவராயினும், பாலவடிவிலே, ஞான உபதேசம் பெரும் ஆர்வத்தால் எப்போதும் ஸநாகாதி யோகியர் சிஷயர்களாகத் தன்னைப்