மாண்டுக்ய உபநிடதம், ஜீவனின் அனுபவ உலகங்களை முறையே ‘விஸ்வா’ (விழிப்புலகம்), ‘தைஜஸா’ (கனவுலகம்), மற்றும், ‘ப்ரக்ஞா’ (காரண அறிவுலகம்) என்று அழைக்கின்றது. மூன்று அனுபவ நிலைகளை முறையே ‘விரட்’ (பூத உலகம்), ‘ஹிரண்ய கர்ப்பம் ’ (நுண்ணிய கருவுலகம்), மற்றும், ‘ஈஷ்வர மாயா’ அல்லது ‘மாயை’ (மாயாவுலகம்) என்று அழைக்கின்றது
தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் புலையன் கேட்ட கேள்விகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன. இவையே மனீஷா பஞ்சகம் எனும் மாபெரும் ஞானப் பொக்கிஷத்தை வெளிக் கொணர்ந்த, ஆழத் தோண்டும் கேள்விக் கோடரிகள்.