Manisha Panchakam – Verse 3 (Tamil)
முதல் இரண்டு ஸ்லோகங்களில் ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஒன்றே என்ற ஞான சாரத்தைக் கொடுத்த ஆதி சங்கரர், இந்த மூன்றாம் ஸ்லோகத்தில் அத்தகைய உயரிய ஆத்ம ஞானத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்காட்டுகின்றார்.
தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் புலையன் கேட்ட கேள்விகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன. இவையே மனீஷா பஞ்சகம் எனும் மாபெரும் ஞானப் பொக்கிஷத்தை வெளிக் கொணர்ந்த, ஆழத் தோண்டும் கேள்விக் கோடரிகள்.