Sri Dakshinamurthy Stotram
பாடல் பலன்
தேனாஸ்ய ஶ்ரவணாத்தத₃ர்த₂மனனாத்₃த்₄யானாச்ச ஸங்கீர்தனாத் |
ஸர்வாத்மத்வமஹாவிபூ₄திஸஹிதம் ஸ்யாதீ₃ஶ்வரத்வம் ஸ்வத:
ஸித்₃த்₄யேத்தத்புனரஷ்டதா₄ பரிணதம் சைஶ்வர்யமவ்யாஹதம் ||10||
விள்ளுவர் சொல்லுவர் வெல்லுவர் மெல்லுவர்
உள்ளதை உடையதை உல்குவர் ஒன்றுவர்
நல்லெண் சித்தியும் நவநிதியமும் அள்ளுவர்
முதல் வரி
ஸர்வாத்மத்வம் = யாதும் ஆத்மா எனும் தத்துவம்; இதி = இவ்வாறு; ஸ்பு2டீக்ருதம் = விளக்கப்பட்டதோ; இத3ம் = இது; யஸ்மாத3= எதனால்; அஷ்மின் = இந்த; ஸ்தவே= துதியில்;
இரண்டாம் வரி
தேன = அதனால்; அஸ்ய= இதனை; ஶ்ரவண தத3ர்த2= பொருள் உணர்ந்து கேட்டு; மனனாத்3= சிந்தித்து; த்4யானாத் = தியானம் செய்து; ச = மேலும்; ஸங்கீர்தனாத் = அதன்படி ஒழுகுதல்;
மூன்றாம் வரி
ஸர்வாத்மத்வ= ஆத்ம ஞானமான; மஹாவிபூ4தி = பேரறிய பெருமை; ஸஹிதம்= உடையதான; ஸ்யாத3= கிடைக்கும்; ஈஶ்வரத்வம் = ஈஸ்வரனாதல்; ஸ்வத:= இயற்கையாகும்;
நான்காம் வரி
ஸித்3த்4யேத் = கிடைக்கு ம்; தத் =; புன: = மீண்டும்; அஷ்டதா4= எட்டு; பரிணதம் = விதமான; ச = மேலும்; ஐஶ்வர்யம் = நந்நிதி; அவ்யாஹதம் = தடையின்றி.
கருத்து
யாதொரு காரணத்தால் இவ்விதம் தெளிவாக விளக்கப்பட்ட பரமாத்ம தத்துவத்தைக் கேட்பதாலும், இதன் பொருளைச் சிந்திப்பதாலும், மீண்டும் மீண்டும் கூறுவதாலும், எல்லாமுமாயிருத்தல் எனும் பரமாத்ம சித்தி, தானாகவே உண்டாகும். மேலும், ‘அட்டமா சித்தி’ எனும் எட்டுவிதப் பெரும்பயனும், நற்பொருளும் தடையற்றுக் கிடைக்கும்.
குறிப்பு
இப்பாடல், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் இந்நூலை, பொருளுணர்ந்து பயின்று, பாடிப் பரப்பி, ஒழுகி இருத்தலின் பலன் எவை எனக் காட்டுகின்றது. ஈரறுமெய்யான அத்வைத ஞானமடைந்தோர் விழையும் முக்தி அவர்களுக்கு முக்கியப் பலனாக அமைகிறது. முக்தி என்பது, சச்சிதானந்த வடிவாக, ஆத்மநிலையில், ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை உணர்ந்திருக்கும் நிலை எனத் தெளிகிறது. இடைப்பயனாக, இந்நூலை அவ்வாறே பயிலும் எவருக்கும், அணிமா முதலான அட்ட சித்திகளும், எல்லா விதமான வளங்களும் தடை யில்லாமல் கிடைக்கும் எனவும் உறுதி செய்கிறது.
ஸ்ரீமத் சங்கராசார்ய பகவத் பாதாள் அருளிய
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
நிறைவினை அடைகிறது.