Sri Dakshinamurthy Stotram

PDF View

SriDakshinamurthyStotram-FinalVersionWEB
Log in to download as PDF
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

பாடல் – 4

நானாச்சி₂த்₃ரக₄டோத₃ரஸ்தி₂த மஹாதீ₃பப்ரபா₄பா₄ஸ்வரம்
ஜ்ஞானம் யஸ்ய து சக்ஷுராதி₃கரணத்₃வாரா ப₃ஹி: ஸ்பந்த₃தே |
ஜானாமீதி தமேவ பா₄ந்தமனுபா₄த்யேதத்ஸமஸ்தம் ஜக₃த்
தஸ்மை ஶ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே ||4||

 

மண்கலயம் உள்ளேஒர்
மணிதீபம் எரிவதனை – மறந்துவிட்டு
மின்மினியாய்க் கலயத்து
மேல்பரந்த ஓட்டைகளில் – மயங்கிவிட்டுக்

கண்நிறையத் தெரியுமொளிக்
கற்றயதை நிச்சயமாய்க் –  காணல்பேதம்
மென்னுடலும் மண்கலயம்
மேலறியும் இந்திரியம் – எல்லாமுள்ளே

நின்றெரியும் ஆன்மவொளி
நிகழ்த்துவது அதுபோலே – ஜகத்திலெல்லாம்
நன்னுருவும் பொருளுமென
நடத்துமுயர் அறிவுமென – ஒளியுமாகி

வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!

 

முதல் வரி

நானா = விதவிதமான; சி₂த்₃ர:  = ஓட்டைகளுடைய;  க₄ட: = பானை;  உத₃ர = நடுவில்; ஸ்தி₂த = நிலையாக இருக்கின்ற;   மஹாதீ₃ப = பெருவிளக்கு; ப்ரபா₄=ஒளி; பா₄ஸ்வரம் = வெளிச்சம்;

இரண்டாம் வரி

ஜ்ஞானம் = (அப்படியான) அறிவு; யஸ்ய = எவருடைய;  சக்ஷுராதி₃=  கண் முதலான; கரணத்₃வாரா =  பொறிகளின் வாயில்; ப₃ஹி: = வழி; ஸ்பந்த₃தே  = செல்கிறது;

மூன்றாம் வரி

ஜானாமி இதி = நான் அறிகிறேன் என;  தமே வ  பா₄ந்தம் = அப்படி ஒளிர்கின்ற;  அனுபா₄த்யே = தொடர்ந்து விளங்குகிறது;  தத் ஸமஸ்தம் = அது முழுமையாக;  ஜக₃த் = உலகம்;

நான்காம் வரி

தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு;  நம இத₃ம் = இப்பணிவு (முழுமையாகட்டும்);  ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே  = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும்  ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.

 

கருத்து

(தோற்ற மாயையினைத் தவிர்த்து, உண்மையை உணரும்போது) எதனுடைய அறிவானது,  பல துளைகளையுடைய மண் குடத்துள் ஒளிர்கின்ற விளக்கினைப்போல, கண் முதலிய இந்திரியத் துளைகள் வழியாக, (தன்னுள்ளிருந்து) பிரகாசிக்கின்றதோ, எதனை அவ்வாறு அடைந்தே எல்லா உலகங்களும் விளங்குகின்றனவோ,  அந்த பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்!

குறிப்பு

முந்தைய பாடலில், பிரம்ம சத்தே உலகில் எல்லாப் பொருளிலும் இருக்கிறது என்று காட்டிய பகவான் ஆதி சங்கரர், இப்பாடலில் பிரம்ம சித்தே உலகில் எல்லாப் பொருளிலும் ஒளிர்கிறது என்பதைக் காட்டுகின்றார்.

‘சத்’ என்பதன் பொருள் உள்ளது, இருத்தல் என்பன.  ‘சித்’ என்பது ஞானம், அறிவு என்பன.  இருத்தல் என்பது, இருக்கின்றது என்ற அறிவு இல்லாமல் முடியாது.  அறிவினால் மட்டுமே இருப்பது, இருக்கிறது எனத்  தெளிவதற்கு முடியும்.  எனவே சத், சித் (உள்ளது, உணர்வது) ஆகிய இவ்விரண்டும் எப்போதும் ஒன்றாகவே பரிமளிக்கின்றன,  அவை இரண்டும் உண்மையில் பிரிக்க முடியாதவை என நாம் அறிய வேண்டும்.

ஆத்மா ‘சத்சித் ஸ்வரூபமாக’,  அதாவது, உள்ளதும், உணர்வுமாக ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், அதன் ஒளியினாலேயே இருப்பும், தோற்ற மாயைகளும் துலங்குகின்றன என்றும், இப்பாடலில் பகவான், ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்.

இருட்டறையில்  துளைகள் உடைய மண்பானைக்குள் ஒரு தீபம் எரிகின்றது.  அத்தீப ஓளி, துளைகளின் வழியே ஒளிர்ந்து,  பானையையும், அதனைச் சுற்றியுள்ள பொருட்களையும் பிரகாசப்படுத்துகின்றது.  அதன் ஒளியினாலேயே,  அங்குள்ள இருப்பும் உணரப்படுகின்றது.    இது போன்றதே ஜீவனும்.

மனிதர்களாகிய நம்முடல் மண்பானைக்கு ஒப்பு.  துளைகள் புலனறிவுக்கான வாயில்கள். ஆத்மாவே உள்ளே எரியும் ஞான தீபம்.   அதுவே உயிர்த்திறனை அளிக்கிறது. அதனாலேயே வெறும் சடலனமான உடற்கருவியின் ஓட்டைகள், அறிவு ஒளி பெறுகின்றன.  இவ்வாறே, உலகில் உயிர்த்தொளிர்வது ஆத்மாவின் ‘சத்சித்’ உருவமே என்பது இப்பாடலில் காட்டப்பட்டது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

Related Posts

Share this Post

Leave a Comment